கர்ப்பமாக இருப்பதாய் பயம் காட்டிய கள்ளக்காதலி.. 2 லட்சம் கேட்டு மிரட்டல்.. வீடியோ காலில் விஷம் குடித்த டெய்லர் காதலன்..!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனது காதலியை வீடியோ காலில் அழைத்து, அவள் முன்னே கையை அறுத்துக் கொண்டும், விஷம் குடித்தும், தூக்கில் தொங்கியும் காதலன் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் மாவட்டம் கங்காகாட் கோட்வாலி பகுதியில் உள்ள எக்லக் நகரை சேர்ந்தவர் அல்தாஃப். வயது 30. குடும்ப சூழ்நிலை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டெய்லராக பணி புரிந்து வந்தார். தானே காவல் நிலையப் பகுதியின் கிழக்கு விராட் மொஹல்லாவில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். குடும்பத்தை பிரிந்து 15 ஆண்டுகள் ஆனதால் குடும்பத்துடனே சேர்ந்து தங்கி வேலை பார்க்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு அவரது தாயார் உடல்நலக்குறைவால் இறந்துபோனார். இறுதி சடங்குகள் செய்ய சொந்த ஊரானா கோட்வாலி பகுதிக்கு அல்தாஃப் சென்றார்.
இறுதி சடங்குகள் முடிந்த பிறகு அல்தாஃபின் ஆசைப்படியே, அவரை சொந்த ஊரிலேயே தங்கி பணி செய்யும் படி அவரது குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டனர். இதனால் மகிழ்ச்சியில் இருந்த அல்தாஃப் அதே பகுதியில் வேலை தேடி உள்ளார். இதற்கிடையே அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அல்தாஃபின் குடும்பத்தினர் அவரை மீண்டும் தானேவுக்கே செல்லும் படி கூறி, அனுப்பி வைத்தனர். இதனால் 2 மாதங்களுக்கு முன்பு அல்தாஃப் மீண்டும் தானே வந்தார். இங்கு வந்த பிறகு தான் அவருடன் காதலில் இருந்த பெண்ணின் சுயரூபம் அல்தாஃபிற்கு தெரியவந்தது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு திருமணம்..? வேண்டாம் என கதறி அழும் சிறுமி.. குண்டு கட்டாக தூக்கி சென்ற கணவர்..!
தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு காரணம் நீ தான் எனக்கூறியும் அந்த பெண் அல்தாஃபை மிரட்டி உள்ளார். அல்தாஃபிடம் 10 ஆயிரம் ரூபாய் மிரட்டி பணம் பெற்றுள்ளார். அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு அல்தாஃபும் பணம் அனுப்பி உள்ளார். அல்தாஃப் பயந்ததை அறிந்த அந்த பெண் மீண்டும் தனக்கு 2 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என அல்தாஃப் மறுத்த போது, என்னை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தாய். அதனால் தான் நான் கர்ப்பமானேன் என போலீசில் புகார் அளிப்பேன் என அந்த பெண் மிரட்டி உள்ளார்.
போலீஸ் விசாரணைக்கும், கைதுக்கும் பயந்து போன அல்தாஃப் அந்த பெண்ணிடம் கெஞ்சி உள்ளார். ஆனாலும் அந்த பெண்ணின் மிரட்டல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அல்தாஃப், கடந்த பிப்ரவரி 21 ம் தேதி, அந்த பெண்ணுக்கு வீடியோ கால் செய்து தனது கஷ்டம் குறித்து தெரிவித்துள்ளார். தனக்கு உயிரை மாய்த்து கொள்வதை தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் கூலாக, என்னை பார்த்துக் கொள்ள என் கணவர் இருக்கிறார். நீ எப்படி போனால் என்ன? என்கிற ரீதியில் பேசினார். மனமுடைந்த அல்தாஃப் வீடியோ காலில், தன் காதலி கண் முன்னே, விஷம் குடித்தது மட்டுமல்லாமல், கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துக்கொண்டுள்ளார். பின்னர் தூக்கில் தொங்கி உள்ளார். இது எல்லாத்தையும் வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணிற்கும் அனுப்பி உள்ளார்.
ஆனால் அந்த பெண், அல்தாஃபை காப்பாற்ற எந்த ஒரு முயற்சியில் செய்யவில்லை. அல்தாஃபின் இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், போலிசார் அவரது உடலை கைப்பற்றினர். அல்தாஃபின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினர். அப்போது அல்தாஃபின் அக்கா, பக்கத்து வீட்டு பெண் குறித்து சொல்லியுள்ளார். வீடியோ காலில் எதிரில் பேசியதும் அந்த பெண் தான் என அடையாளம் காட்டியுள்ளார். இதற்கிடையே அல்தாஃப் இறந்து 4 நாட்கள் ஆனதால் தானேவில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அல்தாஃப் சகோதரி அளித்த புகார் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்
இதையும் படிங்க: Share market: why is down today?: பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.8.80 லட்சம் கோடி காலி..! முதலீட்டாளர்கள் கண்ணீர்..! காரணம் என்ன?