பிரபல பேட்மேன் நடிகர் வால் கில்மர் மறைவு..! நிமோனியாவால் உயிரிழந்த சோகம்..!
பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் நிமோனியா நோயால் காலமானார்.
1959ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பிறந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் பேட்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 1988ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஜோனே வேலி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் கில்மர். ஆனால், மனக்கசப்பு காரணமாக இருவரும் 1996ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதியினருக்கு மெர்சிடஸ் என்ற மகளும், ஜேக் கில்லர் என்ற மகனும் உள்ளனர்.
1984ம் ஆண்டு வெளியான டாப் சீக்ரெட் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார் வால் கில்மர். அதை தொடர்ந்து டாப் கன், கில் மி அகைன், தி டோர்ஸ், டாம்ப்ஸ்டோன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். மேலும் 1995ம் ஆண்டு வெளியான பேட்மேன் ஃபாரெவர் படத்தில் பேட்மேனாக நடித்து அசத்தி இருந்தார்.
இதையும் படிங்க: 50 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு..!
ரெட் பிளானட், வொண்டர்லேண்ட், ஸ்பார்டன், அலெக்ஸாண்டர், லவ் குரு, தி ஸ்னோமேன், டாப் கன் மேவரிக் உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவர், கடைசியாக டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் மேவரிக் படத்துக்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், அவரது ஆவணப்படத்திலும் நடித்துள்ளார். பின்னர், உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக வால் கில்மர் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார்.
தொண்டை புற்றுநோய் பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வந்த அவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக தனது 65 வயதில் காலமானார். அவரது மறைவு ஹாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்ற ஒரு முத்திரையைப் பதித்திருந்த வால் கில்மர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கவலைக்கிடத்தில் மியான்மர்.. 2,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..! நிவாரண பணியில் இந்தியா..!