×
 

'காதலர் தின' ஸ்பெஷல்... அடேங்கப்பா...! இவ்வளவு சாக்லேட், ரோஜா விற்பனையா!

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று, சாக்லேட் மற்றும் ரோஜா பூக்களின் விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே கோலாகலமாக கொண்டாடப்படும் காதலர் தினம், தற்போது இந்தியாவிலும் களைகட்டத் தொடங்கியது.

நீங்களும் அற்புதமான இந்த காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி இருப்பீர்கள். இதுபோன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் பரிசுகளை வழங்கும்போது ரோஜாக்கள் மற்றும் சாக்லேட்டுகள் எப்போதும் முதலிடத்தில் இருப்பது ஏன் தெரியுமா? 

யார் தான் தங்களுக்கு மிகவும் பிடித்தமானவரிடமிருந்து இனிப்புகளை விரும்ப மாட்டார்கள்! ஆன்லைன் டெலிவரி தளமான "ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்" காதலர் தினத்தன்று நிமிடத்திற்கு 581 சாக்லேட் ஆர்டர்களை பெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா? 

இதையும் படிங்க: காதலர் தினத்தில் அதிர்ச்சி சம்பவம்...வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்....காதலி மீது ஆசிட் வீசிய காதலன் 

ஸ்விக்கியின் இணை நிறுவனர் பானி கிஷன் இந்த வசீகர தினத்தின் விற்பனை தரவுகள் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் "எங்கள் ஆய்வாளர்கள் எண்களை நொறுக்கி விட்டனர்; காதலர் தின அவசரம் வெறித்தனமானது; இதை உச்சத்தில் நாங்கள் பார்த்தோம்.

நிமிடத்திற்கு 581 சாக்லேட் ஆர்டர்கள், நிமிடத்திற்கு 324 ரோஜா ஆர்டர்கள்.. காதலுக்கு என்று ஒரு பங்குச்சந்தை இருந்திருந்தால் இதுதான் காளைப் பாய்ற்ச்சல் (ஃபுல் ரன்) என்று சுவாரஸ்யமாக பகிர்ந்து இருக்கிறார். 

டெல்லி வாடிக்கையாளர்கள் 24 ஆர்டர்களில் 174 சாக்லெட்டுகளுக்கு ரூ.29,844-க்கு செலவழித்தனர். இந்த ஆண்டு காதலர் தின சாக்லெட் விற்பனை, கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம். வழக்கமான வெள்ளிக்கிழமை விற்பனையைவிட, பிப். 14 ஆம் தேதி காதலர் தின வெள்ளிக்கிழமையில் ஐந்து மடங்கு விற்பனையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதலர் நாளையொட்டி தமிழ்நாட்டிலும் பலவிதமான ரோஜாப் பூக்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

கொத்தாக ஒரே கட்டில் 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா ரூ.500 வரையிலும் விற்பனையானது.

காதலர் தினத்தன்று உங்கள் துணைக்கு சாக்லேட்டையும், ரோஜாவையும் ஆர்டர் செய்தீர்களா..!?

இதையும் படிங்க: கூட்ட நெரிசல்... ரயில் பெட்டிகளை சூறையாடிய மக்கள்… விபத்துக்கு பிறகும் படையெடுக்கும் பக்தர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share