'விஜய்க்கு இருக்கிற அறிவுகூட இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி வீரமணி ஏமாற்றுகிறார்...' தவெக-வுக்கு மாறும் விசிக ஆதரவாளர்கள்..!
விஜய் எடுக்கக்கூடிய அந்த நிலைப்பாடுகளை முன்னிறுத்திப் பார்க்கும்போது இந்த தலித் இளைஞர்களின் எண்ணம் விஜயை நோக்கித்தான் நகரும். ஆக, விஜய் எடுத்திருக்ககூடிய இந்த நிலைப்பாட்டை விசிகவில் உள்ள இளைஞர்கள் ஆதரிக்கிறோம்.
மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் விஜயின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம்'' என விசிக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தண்ணீர் தொட்டில் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவாகரத்தில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மறுவிசாரணை வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ''முதலைல் விஜய் எனது கொள்கைதலைவர் பெரியார்- அம்பேத்கர் எனத் தெரிவித்து இருந்தார். அப்போது பெரியாருடைய கொள்கைகளை பெரிசா அவர் கடைபிடிக்கவில்லை. அதனுடன் அவர் கனெக்ட் ஆகவில்லை. அவர் பெயரளவில்தான் அப்படிச் சொல்கிறார். அவரிடம் சுத்தமான அரசியல் பாதை இல்லை என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தோம்.அதைத்தான் விசிகாவும் சொன்னது.இப்போது விஜய், வேங்கைவயல் பிரச்னை குறித்து வெளியில் வந்து பேசுகிறார்.
இதையும் படிங்க: உதயநிதி துணை முதல்வராகும் போது... விஜய் முதல்வராக கூடாதா? - நடிகர் ரவிச்சந்திரன் ஆவேசம்!
பெரியார் என்கிற பிரச்னை வரும்போது விசிக யாருடன் நின்றது? பெரியாரிஸ்டுகளுடன் நின்றோம். அம்பேகத்கரிஸ்டும், பெரியாரிஸ்டும் வேற வேற கிடையாது என விசிக பெரியாரிஸ்டுகளுடன் நின்றது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேங்கை வயல் பிரச்னையில் அரசியல் செய்யக்கூடாது. இதைக் கடந்து கணும் என்று சொல்லி இருக்கிறார். அவரை நம்பி ஜனநாயக ரீதியாக தோள் கொடுப்பார் என்று நம்பி சென்றோம். னால் அவரே இப்படிச் சொல்லும்போது எங்களுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது.
இந்த இடத்தில் கீ.வீரமணி என்ன செய்திருக்க வேண்டும் என்றால் விசாரணையை மறு விசாரணை செய்யச் சொல்லி இருக்க வேண்டும்.இல்லை வாயை மூடிக்கொண்டாவது கம்முன்னு இருக்கணும்.வீரமணியில் இந்த நிலைப்பாட்டை ஓரு சாதாரணமா ஒரு கிராமத்தில் ருக்கிற அரசியல் நிலைப்பாடு இல்லாதுஇளைஞன் எப்படிப் பார்ப்பான்? ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு இளைஞன் எப்படிப் பார்ப்பான்.என்னடா விஜய் நம்ம பக்கம் நிற்கிறார். நம்மளோட நட்பு சக்தியாகப் பார்த்த கி.வீரமணி போன்றவர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்று தானே பார்ப்பார்கள்.
அப்போ விஜய் எவ்வளவோ பரவாயில்லையே. விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என்று நாம் விமர்சித்துக் கொண்டு இருந்தாலும், இதில் விஜய் எடுக்கக்கூடிய நிலைப்பாட்டையும், விஜய் எடுக்கக்கூடிய அந்த நிலைப்பாடுகளை முன்னிறுத்திப் பார்க்கும்போது இந்த தலித் இளைஞர்களின் எண்ணம் விஜயை நோக்கித்தான் நகரும். ஆக, விஜய் எடுத்திருக்ககூடிய இந்த நிலைப்பாட்டை விசிகவில் உள்ள இளைஞர்கள் ஆதரிக்கிறோம்.
தவெக தலைவர் விஜய்க்கு இருக்கிற அறிவு கூட வீரமணியிடம் இல்லை..? பெரியார் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்காக குரல் குடுக்கும் விஜயில் இந்த நிலைப்பாட்டை நாங்கள்'' என்கிறார்கள் விசிக ஆதாரவாளர்கள்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுன்?...வேங்கை வயல் பிரச்சனையை தொட்டதால் பாயும் பொய் பிரச்சாரம்?