×
 

ஆளுநர் தேநீர் விருந்து விஜய்யும் புறக்கணித்தார் - அழைப்பு விடுத்தும் ஏற்கவில்லை

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்துக்கு முதல்முறையாக தவெக சார்பில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் விஜய் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. தவெகவிலிருந்தும் யாரும் பங்கேற்கவில்லை.

தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் கட்சிக்கு ஒருபக்கம் அமோக வரவேற்பும் மறுபுறம் கட்சியின் செயல்பாடு குறித்து விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. 

அரசியல் கட்சியாக செயல்படும் அளவுக்கு அனுபவம் மிக்க தலைவர்கள் இல்லாத நிலையில் சமூக வலைதள காலமான இன்றைய காலகட்டத்தில் எளிதாக மக்களை சென்றடையும் வழி இருந்தும் மற்ற தலைவர்கள் போல் தவெக தலைவர்கள் உடனடியாக ரியாக்ட் செய்வதில்லை, பேட்டி, போராட்டங்கள் எதுவும் இல்லை இதனால் மற்ற அரசியல் கட்சிகளால் விமர்சனத்துக்குள்ளாகிவருகின்றனர். 

இதையும் படிங்க: ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த விஜய்..! பின்னணி என்ன..?

மறுபுறம் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் செயலிலும் துவக்கம் முதலே சுணக்கம் இருந்து வருகிறது. ஆனாலும் விஜய் களத்தில் இறங்கினால் ஆளுங்கட்சியே அஞ்சுகிறது, முதல்வரே நேரடியாக விமர்சிக்கிறார். பரந்தூர் சென்ற விஜய்க்கு பலரும் பதிலளிக்கின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் விருந்தில் தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முதன்முறையாக மத்திய அரசின் பிரதிநிதி அரசியல் கட்சியாக தவெகவை அங்கிகரித்து அழைக்கும் நிகழ்வில் விஜய் கலந்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பை விஜய் பயன்படுத்திக்கொள்வாரா? என்கிற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தலைவர் விஜய்யோ அல்லது தவெகவின் நிர்வாகிகளோ கலந்துக்கொள்ள மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆளுநருக்கு எதிரான அரசியல் தமிழகத்தில் உள்ள நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி நடத்தும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ஆளுநர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில், தவெக விருந்தில் கலந்துக்கொண்டால் மேலும் விமர்சனத்துக்குள்ளாகும் என்பதாலும், பாஜகவின் பி டீம் என எளிதாக பட்டம் கட்டிவிடுவார்கள் என்பதாலும் விஜய் யோசித்திருக்கலாம் என்கிறார்கள். 

ஆனால் மறுபுறம் மிசாவை கொண்டுவந்த இந்திராவுக்கு எதிராக பல கட்சிகள் பொங்கியபோதும் எம்ஜிஆர் மத்திய அரசின் ஆதரவை பயன்படுத்த இந்திராவின் ஆதரவை ஏற்றுக்கொண்டார். அதனால் எம்ஜிஆரின் புகழ் குறையவில்லை, ஆகவே விஜய் மத்திய அரசு அங்கிகாரம் கொடுக்கும் விழாவை புறக்கணிக்க கூடாது என்கிற கருத்தும் வைக்கப்படுகிறது. 

விஜய் கலந்துக்கொள்ளாவிட்டாலும் நிர்வாகிகள் யாரையாவது தவெக சார்பில் அனுப்புவதே சிறந்தது, ஆனாலும் ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் வற்புறுத்தல் காரணமாக விஜய்யும் கலந்துக்கொள்ளவில்லை, தவெகவும் கலந்துக்கொள்ளவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது ஆளுநர் மாளிகை வட்டாரத்துக்கு தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புறக்கணிப்பு என்று சொல்லாமல் போகாமல் இருந்துவிடலாம் என தவெக தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் முடிவு செய்து ஒரு நிர்வாகியையாவது அனுப்பி வைப்பீர்களா என்றும் ராஜ்பவன் அதிகாரிகள் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. 

இதையும் படிங்க: அடுத்து எங்கள் ஆட்சி, நான்தான் முதல்வர் என்று பிதற்றுகிறார்கள்.. சீமான், விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் சுளீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share