மாணவர்களுக்கு பறந்த வாழ்த்து... என்ன சொன்னார் விஜய்!!
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில் அவர்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கியதை அடுத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி கடந்த 25 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை சுமார் 8.21 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதை அடுத்து தேர்வுகளின் விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மார்ச் 26ஆம் தேதி முதல் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு புது தலைவலி... தவெக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த சிக்கல்...!
இதனிடையே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
இதை அடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்! என வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தவெக முழு ஆதரவு..! திமுகவை சரமாரியாக சாடிய விஜய்..!