பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு... விருதுநகரில் முடிவில்லாமல் தொடரும் சோகம்...!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே தாதபட்டியில் கடந்த பிப்ரவரி 5 ம் தேதி தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இதில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அதிவீரம்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37),சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே உள்ள தாதபட்டி கிராமத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த பிப்ரவரி 5 ம் தேதி நடந்த வெடிவிபத்தில் வதுவார்படடியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ராமலட்சுமி (50) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதிவீரம்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.இதில் சைமன் டேனியல் கடந்த 9 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அதிவீரம்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37) சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாக நீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 6 பேர் காயம் - ஒருவர் பலி!
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 6 பேர் காயம் - ஒருவர் பலி!