எடப்பாடியின் கோட்டை கனவு செங்கலை ஒவ்வொன்றாக உறுவும் செங்கோட்டையன்; மூவரை வாட்டி வதைக்கும் டெல்லி டென்ஷன்...!
எடப்பாடி - செங்கோட்டையின் இடையிலான விரிசல் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பான பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
எடப்பாடி - செங்கோட்டையின் இடையிலான விரிசல் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பான பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
செங்கோட்டையனை பின்னால் இருந்து சில சக்திகள் இயக்கிக் கொண்டிருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியுடைய தலைமைக்கு எதிராக இயக்க தூண்டிவிட்டிருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையின் மீது ஆக்ஷன் எடுப்பாரா? எடுக்க வாய்ப்பு இருக்கா? என்றும் டாக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் வழக்கம் போல், அதெல்லாம் இல்லை எல்லோரும் ஒற்றுமையாத்தான் இருக்காங்க அப்படின்னும், அதற்கான சமாதான முயற்சிகளும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே உண்மையிலேயே செங்கோட்டையன் - எடப்பாடி சிக்கல் முடிவுக்கு வந்ததா இல்லையா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பாண்டே நிகழ்ச்சியால் பற்றிய தீ:
ரங்கராஜ் பாண்டேவுடைய சாணக்கிய youtube சேனலின் ஆறாம் ஆண்டு விழாவில் சிறப்பு பேச்சாளராக மேடை ஏறினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அப்போது, “நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேன். சோ, கவனமாதான் நான் பேசணும் அப்படின்னு வேடிக்கையாக தான் தன்னுடைய உரையும் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களுடைய சிறப்புகள் குறித்து பேசினார். அதுக்கப்புறம் எம்ஜிஆர் அவர்களுக்கு பிற்பாடு ஜெயலலிதா எப்படி எல்லாம் கட்சியை சிறப்பா வழி நடத்தினாங்க அப்படின்னு பதிவு செய்தார்ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கட்சி 4 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறினார். பின்னர் தொகுதி சம்பந்தமாக நான் சபாநாயகரை சந்தித்தேன் என்றும், அந்த இயல்பான விஷயமும் அரசியலாக்கப்பட்டதையும் எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: அதிமுகவிலும் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன: முடிவுக்கு வந்ததா செங்கோட்டையனின் மனக்கசப்பு..?
தொடர்ச்சியாக தனது உரையில் பாரத பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமனை பற்றியெல்லாம் கூட ஆஹா, ஓஹோ என புகழ்ந்து பேசினார். ஆனால் அப்போது கூட எடப்பாடி பழனிசாமியைப் பற்றி செங்கோட்டையன் குறிப்பிடாததது அதிமுகவில் டென்ஷனை அதிகரித்தது. என்னுடைய பாதை தெளிவானது என் வெற்றி முடிவானது சில வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்ந்து விடமாட்டேன் அப்படின்னு தன்னுடைய உரையையும் முடித்தார்.
இதனால் கடுப்பான வைகைச் செல்வன், அதிமுகவில் சில கசப்பும் கருத்து வேறுபாடும் இருக்கத்தான் செய்யும். அதிமுகவை விட்டு கருத்து வேறுபாடால் போனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் அப்படின்னும் எச்சரிக்கை தொனியில் பேசியிருந்தார்.
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்:
செங்கோட்டையனை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் வி.கே.சசிகலா, டிடிவி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகிறார்களாம்.
செங்கோட்டையனிடன் பேசிய வி.கே.சசிகலா தரப்பு, அதிமுகவில நீங்க ரொம்ப முக்கியமானவர். உங்களுடைய வயதும் அனுபவமும் யாராலும் ஈடு செய்து விட முடியாது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நீங்கள் கட்சியில் வலிமையுடன் செயல்பட்டு வருகிறீர்கள். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும், பாஜகவுடன் இணைந்து ஒரு மெகா கூட்டணியை நாம் உருவாக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தேவை என்றால் பாஜகவுடன் இணைவார், இல்லை என்றால் விலகிச் சென்றுவிடுவார். அதேபோல் தான் கட்சிக்குள்ளும் எதேச்சை அதிகாரத்துடன் செயல்படுகிறார் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.
ஏற்கனவே சசிகலா சிறை செல்லும் போது செங்கோட்டையன் தான் அடுத்த முதல்வராக வர வேண்டியிருந்தது என்றும், எடப்பாடி பழனிசாமி தனது பணபலத்தால் அனைவரையும் வளைத்து போட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனிடையே டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்க படாதபாடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாகவே அதிமுக ஒன்றிணைய வேண்டும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2026ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு தடையாக இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ள இவர்கள், அதற்கு பதிலாக செங்கோட்டையனை வைத்து கட்சிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் டெல்லி தலைமையை திருப்திப்படுத்த யார் முதலில் செங்கோட்டையனை சம்மதிக்க வைப்பது என்பதிலும் போட்டா, போட்டி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக ஆட்சி.. இபிஎஸ்ஸை விரட்டும் ஓபிஎஸ்..!!