23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ராஜினாமா மின்னஞ்சல்… 8 மாத ஊதியத்துடன் வெளியேறலாம்… அமெரிக்காவை அலறவிடும் ட்ரம்ப்..!
மஸ்க் 2022ல் ட்விட்டரை வாங்கியதும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்குறைப்பிற்காக இதே போன்று ஒரு மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அனுப்பினார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் 23 லட்சம் அரசு ஊழியர்கள் தாங்களாகவே வேலையை ராஜினாமா செய்தால் 8 மாத சம்பளத்துடன் அனுப்பப்படுவார்கள். இதனை மறுத்தால் அவர்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அரசு ஊழியர்களுக்கு ஈ-மெயில் அனுப்பி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அரசின் மனித வள நிறுவனமான பணியாளர் மேலாண்மை அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர்களுக்கு ஒருஇ-மெயில் அனுப்பபட்டு உள்ளது. அதில், '' அனைத்து அரசு ஊழியர்களையும் "பொருத்தம், நடத்தையின் மேம்படுத்தப்பட்ட தரங்களுக்கு" உட்படுத்தத் தொடங்குகுகிறோம். எதிர்காலத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். ஆகையால் தானாக முன்வந்து பதவியை விட்டு வெளியேறுபவர்கள் சுமார் ஏழு மாத சம்பளத்தைப் பெறுவார்கள். ஆனால் அவர்கள் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ராஜினாமா முடிவை எடுக்க வேண்டும். கோவிட் நோயிலிருந்து வீட்டிலிருந்து பணிபுரியும் அரசு ஊழியர்களில் கணிசமானவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு வேலை கிடைக்காது.அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.பெரும்பாலான அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அரசு பணியாளர்கள் நம்பகமான, விசுவாசமான அவர்களின் அன்றாட வேலையில் சிறந்து விளங்க பாடுபடும் பணியாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: வங்கதேசத்திற்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தம்... ட்ரம்ப் எடுத்த அதிரடி..!
நாங்கள் முன்னேறும்போது பணியாளர்கள் பொருத்தம், நடத்தை ஆகியவற்றின் மேம்பட்ட தரங்களுக்கு உட்பட்டு இருப்பார்கள். சட்டவிரோத நடத்தை, பிற தவறான நடத்தைகளில் ஈடுபடும் பணியாளர்கள் பணிநீக்கம் உட்பட, பொருத்தமான விசாரணை, ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவார்கள்.இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ராஜினாமா செய்தால், உங்கள் தினசரி பணிச்சுமையைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊதியம், பலன்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.செப்டம்பர் 30 வரை பொருந்தக்கூடிய அனைத்து தனிப்பட்ட பணித் தேவைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்'' என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதற்கான வழிமுறைகளும் உள்ளன அதில், "நீங்கள் ராஜினாமா செய்ய விரும்பினால்: இந்த மின்னஞ்சலுக்கு 'பதில்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் அரசு இ-மெயிலில் இருந்து நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதில், “இந்த மின்னஞ்சலின் ‘Resign’ என்ற வார்த்தையை டைப் செய்து ‘send’ என்பதை அழுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் கூட்டமைப்பு தலைவர் எவரெட் கெல்லி, 'எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம்'' என்று மத்திய அரசு ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் செனட்டர் டிம் கெய்ன் இந்த திட்டத்தை "போலி சலுகை" என்று அழைத்துள்ளார். ''டிரம்பிற்கு அதை வழங்க அதிகாரம் இல்லை. ராஜினாமா செய்யும் ஊழியர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதியங்களைப் பெற மாட்டார்கள். எத்தனை தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள்? அரசாங்க செலவுகள், சேவை நிலைகளில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத்தரவின் மூலம் அரசு ஊழியர்களில் 5%-10% பேர் வேலையை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால்அமெரிக்க அரசுக்கு 100 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது. அரசாங்க செலவுக் குறைப்பு முயற்சியை மேற்பார்வையிட டிரம்ப்பால் நியமிக்கப்பட்டுள்ள எலோன் மஸ்க், ஆரம்பத்தில் $6.8 டிரில்லியன் மத்திய பட்ஜெட்டில் இருந்து $2 டிரில்லியன் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். சிறிய அளவிலான செலவினங்கள் குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.கையொப்பமிடப்படாத மெமோ, புதிய மின்னஞ்சல் முகவரி சமீபத்தில் டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டது. மஸ்க் 2022ல் ட்விட்டரை வாங்கியதும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்குறைப்பிற்காக இதே போன்று ஒரு மின்னஞ்சலை ஊழியர்களுக்கு அனுப்பினார். அதே திட்டத்தை தான் தற்போது அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலும் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: இந்தியா- சீனாவிற்கு இடையே நட்பு ஏற்படுமா..? வெளியுறவு செயலாளர் பெய்ஜிங் பயணம்..!