×
 

திமுக-வால் சாதித்துக் கொள்பவர்கள் யார்..? அடித்துச் சொல்லும் அரசியல் விமர்சகர்..!

கருணாநிதியை போல தமிழுக்கு பங்களிப்பு செய்த அரசியல் தலைவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அதனால்தான் முத்தமிழறிஞர் என உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறார்.  

எம்.ஜி.ஆர் மலையாளி அதனால் அவருக்கு வாக்களிக்காதீர் என்று கருணாநிதியும், திமுகவினரும் கூறியபோது தான் கருணாநிதியின் முன்னோர் தெலுங்கர் என்று அதிமுகவினர் பதிலடி கொடுத்தனர். அதனால் எம்.ஜி.ஆரை மலையாளி என்று கூறுவதை திமுகவினர் நிறுத்தினர். அப்போது முதல் எதிர்கட்சிகள் இந்த விவாதத்தை முன் வைத்து வருகிறது. ஆனால், கருணாநிதியை போல தமிழுக்கு பங்களிப்பு செய்த அரசியல் தலைவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அதனால்தான் முத்தமிழறிஞர் என உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறார்.  

இந்நிலையில், அரசியல் விமர்சகர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இந்த விவாதம் குறித்து விவரித்துள்ளார். ''பெரியார் மொழி அடிப்படையில் கன்னடர் மட்டுமே! தெலுங்கர்அல்ல! திமுகவைத் தெலுங்கர் கட்சி என்கிறார்கள். உண்மையில் அது தெலுங்கர் கட்சியாக இருந்தால் வைகோவை எதற்கு கட்சியை விட்டு நீக்கினார்கள். 2006 முதல் 2011  வரையிலான திமுக ஆட்சியில் ஆற்காடு வீராச்சாமி மிகவும் ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர் வகித்த பதவிகள் கூட கோப்புகளில் வராமல் மறைக்கப்பட்டார். அதையெல்லாம் நான் கண்ணால் பார்த்ததுண்டு. 

அமைச்சராகும் தகுதி இருந்தும் விருதுநகர் பெ சீனிவாசன் ஏன் ஒதுக்கப்பட்டார். அதேபோல் சிந்தனைச் சிற்பி சிபி சிற்றரசு அவர்களுக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்க வில்லை? அதைத் தொடர்ந்து என்னைப்போல் திமுக விற்கு உதவி செய்து பல வகையில் உழைத்து ஒத்துழைத்து வந்தவர்களும் ஏன் நீக்கப்பட்டார்கள். திறமையே தகுதிக் குறைவு என்கிற பார்வை  திமுகவிற்கு எப்படி வந்தது? குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலோ, தூத்துக்குடி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களிலோ ஒரு  திறமையான நாயுடு கூடத் தேர்தலில் நிற்க முடியாது? அப்படி இன்றைய நிலை. கலைஞர் போட்யிட எனக்கு வாய்ப்பு தர நினைத்தும் முடியவில்லை. 

இதையும் படிங்க: கவலை கொள்ளாத தமிழக அரசு! அதிகரித்துவரும் கடன், வருவாய் பற்றாக்குறை!

#திமுகதெலுங்கர்கட்சிஅல்ல
—————————————
பெரியார் மொழி அடிப்படையில் கன்னடர் மட்டுமே! தெலுங்கர்அல்ல! திமுகவைத் தெலுங்கர் கட்சி என்கிறார்கள்.

உண்மையில் அது தெலுங்கர் கட்சியாக இருந்தால் வைகோவை எதற்கு
கட்சியை விட்டு நீக்கினார்கள். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் ஆற்காடு… pic.twitter.com/wq2WF5Nf6d

— K.S.Radhakrishnan (@KSRadhakrish) February 8, 2025

 

இதே ஸ்டாலின் தெலுங்கு பேசுவர்களை விரும்பியது இல்லை. அவரின் அடிமைகளை விரும்புவார். இப்படி இருக்கும்போது திமுக ஒரு தெலுங்கர் கட்சி என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? கலைஞரே தெலுங்கர் கிடையாது என்று அடித்துச் சொல்ல முடியும். அவர் குடும்பம்  தெலுங்கர் குடும்பம் என்றெல்லாம் வரையறுக்க முடியாது. 

உண்மையைச் சொன்னால்  தமிழ்நாட்டில் அதிக ஜனத்தொகை கொண்ட சாதிகளுக்கு தான் திமுகவில் அதிக மரியாதையும், இட ஒதுக்கீடுகளும். அதன் அடிப்படையில்தான் எல்லா வகைப் பலன்களும் நலன்களும் கிடைக்கின்றன. ஏறக்குறைய வலுத்த மக்கள் தொகை கொண்ட  சாதித் தலைவர்கள் தான் திமுகவைப் பயன்படுத்தி சாதித்துக் கொள்கிறார்கள்.!

நிலைமை இப்படி இருக்க தமிழக நலன் மீது அக்கறை கொண்ட தெலுங்கு பேசுபவர்கள் என்று சொல்லித்  தொடர்ந்து அவர்கள் மீது வெறுப்பை ஏற்றக்கூடிய வந்தேறி என்கிற வார்த்தையை பயன்படுத்தி அவர்களை மௌனிக்க செய்வதும் கையாலாகாமல் ஆக்குவதுமே இந்தத் தமிழ்நாட்டு தேர்தல் அதிகாரத்தின் யுத்தியாக இன்றைக்கு இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இருந்தாலும் மறைந்தாலும்.... பகைவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்த எம்ஜிஆர்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share