இரு மொழி கொள்கை பேசும் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பீர்களா? எச்.ராஜா கிடுக்கி பிடி
இருமொழிக் கொள்கை பேசும் தலைவர்கள் சவால் விடுகிறேன் நீங்கள் உடனடியாக உங்கள் பிள்ளைகளை மும்மொழி பயிலும் பள்ளியில் இருந்து விடுவித்து அரசு பள்ளியில் சேர்க்க தயாரா? சேர்த்தால் உங்களை உண்மையான அரசியல்வாதி என்று ஏற்றுக்கொள்கிறேன் என எச் ராஜா கேல்வி
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழக அரசும் கூட்டணிக்கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யும் அதே பாணியை கையிலெடுத்துள்ளார். இதை கண்டித்து பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா விஜய் உள்ளிட்ட தலைவர்களுக்கு சவால் விடுத்தார். அவரது பேச்சு வருமாறு...
”தமிழ்நாட்டுல ஒரு ஃபேன்சி, நாம மத்திய அரசாங்கத்திற்கு எதிராக பேசினால் தான் தமிழக மக்கள் ஓட்டு போடுவார்கள், அதனால் தமிழ்நாட்டில் இப்போது இருக்கிற மிகப்பெரிய மூடநம்பிக்கை அது, அதனால எல்லாரும் அதை பேசுகிறார்கள். இந்தக் கல்விக் கொள்கையில் தவெக சொன்னதால் நான் கேட்கிறேன், விஜயின் குழந்தைகள் எங்கே படித்தது? இரு மொழி கொள்கையிலா? சமச்சீர் கல்வியிலா? டெல் மீ. இந்த அமைச்சர் உட்பட கார்ப்ரேஷன் வார்டு கவுன்சிலர் யாராவது தன் குழந்தைகளை சமச்சீர் கல்வியில் சேர்த்திருக்கிறார்களா? எல்லோரும் சாதாரண வார்டு கவுன்சிலர் பெரிய பெரிய லீடர்ஸ் திமுகவில் அவர்கள் எல்லோரும் மும்மொழி கொள்கை கல்வி கூடங்களை வைத்து பணத்தில் புரளுகிறார்கள்.
இதையும் படிங்க: 'பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு..?' கொதிக்கும் சீமான்..!
உங்கள் குழந்தைகள் எல்லாம் மும்மொழி படிக்கும் நான்கு மொழி படிக்கும், வெளிநாட்டில் படிக்கும் ஆனால் சாதாரண குழந்தைகளை இவர்கள் எங்கு தடை செய்கிறார்கள். இவர்கள் எங்கு தடுkகிறார்கல்? ஓரளவு மிடில் கிளாஸ், கொஞ்சம் மேலே இருக்கும் குழந்தைகள் பிரைவேட் ஸ்கூல்களில் இந்தி, சமஸ்கிருதம் படிப்பதை இவர்களால் தடுக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற என் ஏழை தொழிலாளி, விவசாயி குழந்தைகள் குரல்வளையை நெறிக்கிறார்கள். பிடிக்காது என்கிறார்கள். என்ன ஒரு புத்திசாலித்தனம். இது யாராக இருந்தாலும் நான் விஜய்யை மட்டும் சொல்லவில்லை, இங்கு இருக்கின்ற இருமொழிக் கொள்கை தொடரும் என்று சொல்கிற எல்லோரும், நாளை காலை உங்கள் குழந்தைகளை மும்மொழி கொள்கை உள்ள பள்ளிகளிலிருந்து அழைத்து வந்து சாதாரண இருமொழி கொள்கை உள்ள அரசு பள்ளியில் சேர்க்க வையுங்கள்.
என் பேரன் பேத்தி கூட மத்திய அரசு பள்ளியில் படிக்கிறது, உங்கள் பள்ளிக்கூடத்தில் கொண்டு வந்து எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. யாரு ஒரு லட்சம் இரண்டு லட்சம் கொடுப்பது. இது வருஷத்துக்கு 3 ஆயிரம் 4 ஆயிரம் ரூபாய் மட்டும் தான். ஆதனால் ஏழை எளிய குழந்தைகளை வஞ்சிக்கின்ற இந்த வேஷதாரிகளை, இந்த தேர்தலில் இந்த மொழிக் கொள்கை ஒரு முக்கியமான மேஜர் விஷயமாக தமிழ்நாட்டில் போட்டு பார்ப்போம் என்கிறேன். இந்த ஏழை எளிய மக்களின் விரோதிகளை வீழ்த்துவோம். எந்த மாநிலத்திலும் இது போன்ற தடை இல்லை. ஏனென்றால் எல்லா மாநிலத்திலும் திரீ லாங்குவேஜ் ஃபார்முலா இருக்கிறது. கேரளாவில் இருக்கிறது, ஆந்திராவில் இருக்கிறது, கர்நாடகாவில் இருக்கிறது, தெலுங்கானாவில் இருக்கிறது ஏன் மேற்குவங்கத்தில் இல்லையா எல்லா மாநிலத்திலும் மூன்று முன்மொழிக் கொள்கை இருக்கிறது.
நான் கேட்கிறேன் பாண்டிச்சேரியில் நவோதயா வித்யாலயா இருக்கிறது. அது உண்டு உறைவிட பள்ளி. அங்கு எல்லா குழந்தைகளுக்கும் கல்வி இலவசம். அங்கு தமிழ் இல்லையா? நமது பள்ளிகளில் மட்டுமே இல்லை. 1967 எந்த குழந்தையும் தமிழ் படிக்காமல் ஆறாம் கிளாஸ் போக முடியாது. ஃபஸ்ட் பார்ம் என்பார்கள். முதலில் ஃபர்ஸ்ட் பாரம் இல்லாமல் இந்தி படிக்காத குழந்தை நான். எனக்கு முன் முதல் வகுப்பு வந்த குழந்தைகள் இந்தி படித்தது. எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. எனக்கு சி.ஏ முடித்தவுடன் மத்திய பிரதேசத்தில் வேலை கிடைத்தது. அங்கு போனதும் எல்லோரும் ஹிந்தியில் பேசுவார்கள். நான் அவர்களிடம் சொல்லும் முதல் வார்த்தை, ”முஜே இந்தி நஹி மாலும்” நான் கத்துக்கிட்ட முதல் இந்தி வார்த்தை இந்த வார்த்தை. அது போன்று ஒரு தலைமுறையே கெடுத்த ஆட்சி இந்த திராவிடயன் ஸ்டாக் ஆட்சி.
உங்கள் குழந்தை மும்மொழி படிக்கவில்லையா? நான் கேட்கிறேன், வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதாவது இருந்தால் இந்த இரு மொழி கொள்கை பேசுகின்ற அனைத்து அரசியல்வாதிகளும் 24 மணி நேரத்தில் உங்கள் குழந்தைகளை தாங்கள் படிக்க வைக்கும் கல்வி நிறங்களில் இருந்து விடுவித்து நீங்கள் நடத்தும் மாநில பள்ளிகளில் சேருங்கள். அப்படி செய்தால் அப்ப நீங்க யோக்கியமானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர், மக்கள் நலம் விரும்புகிறவர் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். பகிரங்கமாக அறிவிப்பேன்.
நாளைக்கு விஜய் வெளிநாட்டில் எங்கு தன் குழந்தை படித்தாலும், உடனடியாக அழைத்த வாருங்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளி சேருங்கள். ஸ்டாலின் அவர் செய்யனும், கனிமொழி அவர் செய்யனும், எல்லாரும் செய்யுங்கள். ஏழை எளிய தமிழ் மக்களின் துரோகிகள் இந்த தலைவர்கள் அத்தனை பேரும் யாராக இருக்கட்டும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை” இவ்வாறு எச். ராஜா சரமாரியாக கேள்வி எழுப்பினார்
இதையும் படிங்க: 'நீங்கள்லாம் கருத்து சொன்னா சரியா இருக்காது தம்பி…' விஜயை வெளுத்து வாங்கிய தமிழிசை..!