×
 

இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா.? ஓபிஎஸ்ஸின் ரகசியம் என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் ஆதரிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5இல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ளன. எனவே ஆளும் திமுகவுக்கும்  நாம் தமிழர் கட்சிக்கும்  இடையே இரு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.  இத்தேர்தலைப் புறக்கணித்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அறிவிக்கவில்லை. எனவே, இக்கட்சிகளின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு செல்லுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவில்லை என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. ஆனால், தேர்தலில் வாக்களிப்போம், வாக்கு யாருக்கு என்பது ரகசியம். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின் எங்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும்" என்று பன்னீர்செல்வம் கூறினார்.

இத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து மற்றவர்கள் சுயேட்சைகள்தான். எனவே, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் திமுகவை ஓபிஎஸ் வெளிப்படையாக ஆதரிக்க முடியாது.  அப்படியெனில் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் மிச்சமிருக்கிறது. எனவே, அக்கட்சியைத்தான் ஓபிஎஸ் ஆதரிக்க முடியும். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழரை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருகிறார். எனவே இந்தச் சூழலில் பாஜகவோடு கூட்டணியில் உள்ள ஓபிஎஸ் தரப்பு என்ன முடிவு எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் அராஜகம்.. திமுக மீது நாம் தமிழர் சரமாரி புகார்

இதையும் படிங்க: பேரம் பேசியது உண்மையா? - திமுக குறித்து சீதாலட்சுமி சொன்ன ஒற்றை வார்த்தை - பரபரக்கும் நாதக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share