×
 

வேலையில்லை என்ற HR... தீக்குளித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

சென்னையில் திடீரென பணிநீக்கம் செய்ததால் அதிர்ச்சியான பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரின் கணவர் பால்ராஜ் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். சுமதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கூலி வேலை செய்து இருவரையும் வளர்த்து வந்த சுமதி, தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  10 மாதங்களாக ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வத சுமதிக்கு அங்கு பிரச்சனை வந்துள்ளது. 

திடீரென அந்த நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு ஆண்களை நியமிப்பதாக கூறி சுமதியை பணிநீக்கம் செய்துள்ளனர். திடீரென இன்றுடன் பணிநீக்கம் செய்ததால் அதிர்ச்சியான சுமதி தனது சம்பளத்தை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு நிறுவனத்தில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியே சென்ற சுமதி, சிறுதி நேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்துள்ளார்.

இதையும் படிங்க: என் சாவுக்கு நீ தான் காரணம்..அங்க மட்டும் போயிடாத என கணவன் கடிதம்!!

அப்போது சுமதி தனது கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அதை பார்த்து அலறிய ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சுமதிக்கு 62%வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் சுமதிக்கு அந்நிறுவனத்தின் ஹெச்.ஆர். மூலம் தொந்தரவுகள் இருந்ததாகவும் சுமதி சரியாக வேலை செய்யவில்லை என திட்டி வந்தவர், ஆண் பணியாளரை ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு நியமிக்க பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. 
இதனால் அந்நிறுவனத்தின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலன் இறந்ததால் பேரதிர்ச்சி... இரவே காதலி செய்த விபரீதம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share