×
 

"நீ அழகா இல்லை" கடும் சித்ரவதை... இளம்பெண் மர்ம சாவு... சைக்கோ கணவர் கைது

அழகாய் இல்லை என் சொல்லி கணவனும் அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்த புதுப்பெண் மர்மமான முறையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுஜா (வயது 25). இவருக்கும் அதே பகுதியில் ஆண் செவிலியராக பணியாற்றி வரும் பிரபின் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

விஷ்ணுஜா வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் "நீ அழகாய் இல்லை' என்று சொல்லி, அவ்வப்போது கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். கணவரும் இந்த காரணத்தை சொல்லி மனைவியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்வது கிடையாது.

"இருவரும் வேலைக்கு சென்று சம்பாதித்தால்தான் குடும்பம் நடத்த முடியும்; எனது ஒருவனுடைய சம்பளத்தில் மட்டும் நாம் குடும்பம் நடத்த முடியாது. அதனால் ஏதாவது வேலை தேடிப் பார்" என்றும் கணவன் குடும்பத்தினர் அடிக்கடி நச்சரித்து இருக்கிறார்கள். "ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் விஷ்ணுஜாவுக்கு வேலை கிடைக்கவில்லை" என்று அவருடைய தந்தை வாசுதேவன் செய்தியாளர்களிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பிப்ரவரி 13 மோடி - டிரம்ப் சந்திப்பு..! இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன..?

மேலும் அவர் கூறுகையில், "கணவன் வீட்டாரின் துன்புறுத்தல் குறித்து தனது மகள் தங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. மகள் இறந்த பிறகு அவளுடைய தோழிகளிடமிருந்து தான் அது பற்றி தெரிந்து கொண்டதாகவும்" கூறினார். 

"திருமணத்திற்கு முன்பு எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு பிரச்சினைகளிலும் மகள் கை கொடுத்து ஆதரவு அளித்து வந்தார். ஆனால் அவருக்கு திருமணம் ஆன பிறகு அவர்களுடைய குடும்ப பிரச்சனைகளில் தலையிட ஒருபோதும் எங்களை அவர் அனுமதித்தது இல்லை. 

மகளின் புகுந்த வீட்டு நிலைமையை ஓரளவுக்கு அறிந்து கொண்ட நாங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்பிய போது எப்படியும் தனது கணவனை நல்வழிக்கு மாற்றி விடுவதாக சொல்லி எங்களை சமாளித்து வந்தார். அவன் எனது குழந்தையை அடித்து இருக்கிறான் என்பது கூட இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. அத்துடன் வேறு பெண்களுடன் அவனுக்கு தொடர்பும் இருந்திருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்" என்று, கண்ணீர் மல்க விஷ்ணுஜாவின் தந்தை வாசுதேவன் தெரிவித்தார். 

"எனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும், கணவன் பிரபின் தான் அவளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டது போல் தூக்கில் தொங்க விட்டு இருக்கிறார் என்று நம்புவதாகவும்" மேலும்அவர் கூறினார். கணவனின் துன்புறுத்தலுக்கு அவனுடைய குடும்பத்தினரும் ஆதரவு அளித்ததாகவும் வாசுதேவன் குற்றம் சாட்டியிருக்கிறார். 

"விஷ்ணு ஜாவின் துயரமான மரணத்திற்கு பிறகு என்னென்ன கஷ்டங்களை எனது மகள் அனுபவித்தார் என்பதை குறித்து அவருடைய தோழிகள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை எனக்கு தெரிவித்தனர்."மனோரமா  ஆன்லைனி"ல் வெளியான ஒரு செய்தியின்படி பிரபின் விஷ்ணு ஜாவை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாக அவருடைய நண்பர் ஒருவர் கூறியிருக்கிறார். 

இனி தாங்கிக் கொள்ளவே முடியாது என்ற ஒரு நிலை வரும் போது தான் அவள் என்னிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினாள். நான் அவளிடம் எங்கள் வீட்டுக்கு வந்துவிடும்படி அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்"  என்று அவருடைய நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். 

"மகள் விஷ்ணுஜா உடைய வாட்ஸ் அப் நம்பர் பிரபினின் தொலைபேசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவள் ஒருபோதும் எங்களுடன் வாட்சப்பில் சுதந்திரமாக பேசியதில்லை நாங்கள் டெலிகிராமில் பேசுவோம் அதனால் அது அவனுக்கு தெரியாது" என்றும், மகளின் நண்பர் ஒருவர் தெரிவித்ததாகவும் வாசுதேவன் கூறியிருக்கிறார். விஷ்ணு ஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக கைதான பிரபின் மற்றும் குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு இனி கவலை கிடையாது..சூப்பர் ஆப் வருகிறது.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share