×
 

உலக தண்ணீர் தினம்..! "பனிப்பாறை பாதுகாப்பு" உறுதி ஏற்றது ஐ.நா..! 

ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஐநா சபை உலக தண்ணீர் தினத்தை உருகும் பனிப்பாறை இலட்சினை வெளியிட்டு உறுதிமொழியை ஏற்றுள்ளது.

1993 ஆம் ஆண்டு முதல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது மனித வாழ்வின் பாரம்பரியமாக தண்ணீரின் இன்றியமையா பங்கை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு கருபொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பணிப்பாறை பாதுகாப்பு என்ற மையக்கருத்துடன் ஒரு முக்கியமான பிரச்சினையை ஐ.நா சபை முன் வைத்துள்ளது பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர் கோபுரங்கள் மலைகள் பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

இதையும் படிங்க: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த முக்கிய தலைவர்கள்... தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கப்போவது யார், யார்?

இதனால் அவற்றைச் சார்ந்து வாழும் பல கோடி கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து எதிர்நோக்கி உள்ளது என்று ஐ.நா பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் ஐ நா சபையின் உலக நீர் மேம்பாட்டு அறிக்கையின் படி தண்ணீரின் பங்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக தண்ணீர் தினம் 1992 ஆம் ஆண்டு ரியோடிஜெனிராவில் நடந்த ஐநா சுற்றுச்சூழல்  மேம்பாட்டு மாநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. அங்கு கூடிய தலைவர்கள் அனைவரும் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் அதை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

பின்னர் மார்ச் 22 1993 முதல் தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதாரமான நீரை உறுதி செய்யும் நிலையான வளர்ச்சி இலக்கு நிர்ணிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்களுக்கு பாதுகாப்பில்லாத குடிநீரே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது 2025 ஆம் ஆண்டு தண்ணீர் தினத்தை ஒட்டி ஐநா சபை பணிப்பாறைகளை பாதுகாப்பதற்கான சர்வதேச ஆண்டாக அறிவித்ததுடன் அதற்கான லோகோவையும்  வெளியிட்டுள்ளது.

உலகின் 70% நல்ல தண்ணீரை பணி பாறைகளே சேமித்து வைத்துள்ளன. பூமியின் வட துருவத்தில் அதிகம் உள்ள பனிப்பாறைகளை காப்பாற்ற ஐநா சபை உறுதிமொழி ஏற்று கொண்டுள்ளது.

குறிப்பாக ஆர்டிக் கடற்கரை பகுதியில் ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர்க்கும் அதிகமாக பனிப்பாறைகள் உள்ளன இவை தற்போது, உருகி வரும் நிலையில் இவற்றைக் காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை ஐநா சபை தண்ணீர் இன்று உறுதிமொழி  இன்று எடுத்துள்ளது.

உலக தண்ணீர் தினம் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்களாகிய நாமும் தண்ணீர் சிக்கனத்திற்காக கைகோர்ப்போம் தண்ணீர் மாசு படாமல் இருக்க  உறுதி மொழி ஏற்போம்.

இதையும் படிங்க: 15 நாள் கெடு: எங்கள் புல்டோசர் இடிக்கும்… மசூதியை இடிக்க யோகி ஆதித்யநாத் நோட்டீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share