அரசியலில் நீடிக்க விரும்பவில்லை..! நான் ஒரு யோகி.. ஆதித்யநாத் அதிர்ச்சி பேட்டி..!
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் அரசியலில் நீண்ட காலத்திற்கு நீடிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் அரசியலில் நீண்ட காலத்திற்கு நீடிக்க போவதில்லை எனவும் அதற்கான அவசியமும் இல்லை என்றும் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அவர் அளித்துள்ள நேர்காணலில் பல பரபரப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பிரதமர் எனும் இலக்கை நோக்கி தான் நகர்ந்து செல்லவில்லை என்றும் இது தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, இந்த பொறுப்பு முடிந்தவுடன் அரசியலில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவேன் என்றும் அந்த பேட்டியில் யோகி ஆதித்தய நாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?
அரசியல் என்பதை முழு நேர தொழிலாக தாம் கருதவில்லை என்றும் உண்மையில் நான் ஒரு யோகி என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதேபோன்று மாநிலத்தின் முதல்வர் என்னும் பொறுப்பு கொடுத்து, கட்சி என்னை உத்தர பிரதேச மக்களுக்காக வேலை செய்ய கட்டளையிட்டுள்ளது. அதனால் இங்கு நான் வேலை செய்து வருகிறேன், இது எனது முழு நேர தொழில் அல்ல என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு கட்டளை வரும் வரை வேலை செய்வோம் அது முடிந்தவுடன் ஒரு காலக்கெடு உள்ளது. அது முடிந்தவுடன் இதிலிருந்து முற்றிலும் விலகி விடுவோம் என தாம் விலகப் போகும் செய்தியை மறைமுகமாக சுட்டி காட்டினார்.
சிவசேனை உத்தவ் தாக்கரே கட்சியின் சஞ்சய் ராவத் சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்ற பிரதமர் மோடி விரைவில் ஓய்வு பெறப் போகிறார் என தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் யோகி ஆதித்யநாத் இந்த பேட்டியில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் ஓய்வு காலம் பற்றியும் அரசியல் தலையீடு பற்றியும் விரிவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சஞ்சய் ராவத்தின் கருத்து குறித்து பதிலடி கொடுத்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவேஸ் 2029 ஆம் ஆண்டும் மோடியே மீண்டும் பிரதமராக இருப்பார் என கூறினார்.
அரசியல் ஓய்வு மற்றும் பாஜக கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து கருத்து தெரிவித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜகவில் எந்த நிலையிலும் கருத்து வேறுபாடு சுத்தமாக இல்லை என்றும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒரே இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டு காலமாக இரண்டு முறையாக உத்தர பிரதேச முதல்வராக பணியாற்றி வரும் யோகி தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்யும் முதல்வராக பார்க்கப்படுகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக உத்தர பிரதேசத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில் வெறும் 33 இடங்களை மட்டுமே பாஜக வென்றது அது கடந்த தேர்தலை விட 19 இடங்களில் குறைவாகும். இதனால் ஆதித்யநாத் சரிவர வேலை செய்யவில்லை என கூறப்பட்டது.
இதுபோன்ற பல சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் PTI-க்கு பேட்டி அளித்த யோகி ஆதித்யநாத், கட்சிக்கும் தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் காலக்கெடு முடியும்போது அரசியலில் இருந்து தாம் முற்றிலும் விலகி விட்டு ஆன்மீகப் பணியில் செல்லப் போவதாக சூசகமாக அறிவித்துள்ளது உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!