ஜெலென்ஸ்கியின் சூதாட்டம், டிரம்பின் பேராசை...மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் ரஷ்யா..?
ரஷ்யாவால் சபோரிஷியா ஆக்கிரமிக்கப்படும்போது அமெரிக்கா அதை எப்படி கைப்பற்றும் என்கிற பெரும் கேள்வி எழுகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை மட்டுமல்ல, அமெரிக்காவையும் குழப்பத்தில் ஆழ்த்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையம் இப்போது ஒரு ராஜதந்திர சிப்பாயாக மாறி ஆகிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க முதலீட்டிற்கு ஆலையைத் திறக்க ஜெலென்ஸ்கி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ரஷ்யாவால் சபோரிஷியா ஆக்கிரமிக்கப்படும்போது அமெரிக்கா அதை எப்படி கைப்பற்றும் என்கிற பெரும் கேள்வி எழுகிறது.
மார்ச் 2022 முதல் சபோரிஷியா அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யா பராமரித்து வருகிறது. இந்த ஆலை உக்ரைனின் எரிசக்தி தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவையும், ரஷ்யாவையும் நேரடி மோதலுக்கு இட்டுச் செல்லும்.
டிரம்பின் உக்ரைன் ஆலோசகரும் முன்னாள் ஜெனரலுமான கீத் கெல்லாக் கூறுகையில், ''சபோரிஷியா ஆலையில் அமெரிக்க முதலீட்டைப் பரிசீலிப்பீர்களா என்று டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டபோது, ஜெலென்ஸ்கி உடனடியாக ஆம் என்று கூறினார். ரஷ்யா, உக்ரைன், அமெரிக்க நலன்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் டிரம்ப்புக்கு இந்த திட்டம் ஒரு 'முப்பரிமாண சதுரங்கம்' போன்றது'' என்று அவர் கூறுகிறார்.
இதையும் படிங்க: அதிபர் டிரம்பால் எழுந்த புது பிரச்சனை… ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்!!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, சபோரிஷியா வெறும் அணுமின் நிலையம் மட்டுமல்ல, உக்ரைனில் ரஷ்ய ஆதிக்கத்தின் சின்னமாகவும் உள்ளது. இந்த ஆலையைத் தாக்கியதாக ரஷ்யாவும், உக்ரைனும் தொடர்ந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைன் ஆலையை மீண்டும் கைப்பற்ற பல தாக்குதல்களை நடத்தியதாகவும், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
மறுபுறம், ரஷ்யா இந்த அணுசக்தி நிலையத்தை 'அணு ஆயுதமாக' பயன்படுத்துகிறது என்று உக்ரைன் கூறுகிறது. இந்த ஆலை ரஷ்ய இராணுவத்தால் பாதுகாக்கப்படுகிறது. உக்ரைன் வீரர்கள் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆலையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றால், ரஷ்யாவின் எதிர்வினை என்னவாக இருக்கும்? இந்தப் பிரச்சினையில் டிரம்பும் புடினும் நேரடியாக மோதுவார்களா? என்பது பெரும் கேள்வி.
சமீபத்தில், டிரம்ப்- புடின் இடையே இரண்டு தொலைபேசி உரையாடல்கள் நடந்தன. அதில் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நீண்ட தூர தாக்குதல்களை நிறுத்த டிரம்ப் முன்மொழிந்தார். ஆனால், இப்போது ஜெலென்ஸ்கி சபோரிஷியா அணுமின் நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றி வெளிப்படையாகப் பேசுவதால், இந்த சமன்பாடு முற்றிலும் மாறக்கூடும். இந்த ஆலையில் அமெரிக்கா தலையிட்டால், ரஷ்யா அதைப் போரைத் தூண்டும் முயற்சியாகக் கருதும். இது அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரிக்கக்கூடும். உக்ரைன் போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையக்கூடும்.
சபோரிஷியா அணுமின் நிலையத்தில் பேரழிவின் அறிகுறிகளையும் சமீபத்திய தாக்குதல்களின் யதார்த்தத்தையும் காண முடிகிறது.சமீபத்திய காலத்தில் சபோரிஷியா ஆலை மீது 100க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளன. தொழிற்சாலைக்குள் விழுந்த அமெரிக்க ஏவுகணையின் ஒரு பகுதியை காண முடிகிறது. அமெரிக்காவும், உக்ரைனும் இந்த ஆலையைத் தாக்குகின்றன என்பதை நிரூபிக்க, இந்த ஏவுகணையின் எச்சங்களை ரஷ்யா ஐஏஇஏ-விடம் ஒப்படைத்தது. சபோரிஜி அணுமின் நிலையம் இனி வெறும் எரிசக்தி மையமாக மட்டும் இல்லை. மாறாக இராஜதந்திரப் போருக்கு ஒரு புதிய களமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த ஆலை மூன்றாம் உலகப் போருக்குத் தூண்டுதலாக மாறுமா?
இதையும் படிங்க: TRUTH SOCIAL MEDIA -வில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி..!