×
 

டிரம்பின் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்... மனம் மாறிய ஜெலன்ஸ்கி

உக்ரைன் மக்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தொனி திடீரென மாறிவிட்டது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான விவாதம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. கிட்டத்தட்ட அந்த சந்திப்பில் ஜெலன்ஸ்கி மிரட்டப்பட்டார்… விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால்,  லண்டனுக்கு வந்த ஜெலன்ஸ்கியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிகவும் மென்மையாக மாறிவிட்டார். அவர் அமெரிக்காவின் ஆதரவைப் பாராட்டியதோடு மட்டுமின்றி, டிரம்பிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 

லண்டனில் நடந்த ஒரு நிகழ்வின் கலந்து கொண்ட அவர், ''​​அமெரிக்காவில் இருந்து எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். ஜனாதிபதி டிரம்ப், காங்கிரஸ், அமெரிக்க மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். குறிப்பாக இந்த மூன்று ஆண்டுகளில் நாம் ஒரு முழுமையான ரஷ்யப் போரை எதிர்கொண்டு இருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் இந்த நிலைப்பாட்டின் மாற்றம் பெரும் அரசியல் அழுத்தமாக பார்க்கப்படுகிறது. ஒரு இராஜதந்திர நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே..!'- ஜெலென்ஸ்கியை- டிரம்ப் மிரட்டியபோது அங்கேயே கலங்கி அழுத பெண்..!

வெள்ளை மாளிகையில் டிரம்புடன் நடந்த சூடான விவாதத்திற்குப் பிறகு இந்த ஜெலன்ஸ்கியின்  இந்த மாற்றம் உலக நாடுகளிடையே ஆச்ச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த உதவி தொடர்பாக டிரம்புக்கும், ஜெலென்ஸ்கிக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன. ஆனால் இப்போது உக்ரைன் ஜனாதிபதி அவருக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறார்.

ஜெலென்ஸ்கி அந்த நிகழ்ச்சியில், ''அமெரிக்க அதிபருடனான நமது உறவு இரண்டு தலைவர்களுக்கு  இடையேயான உறவு மட்டுமல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான, வலுவான உறவு. அதனால்தான் நான் எப்போதும் அமெரிக்க மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு, மனித உரிமைகள், ஒத்துழைப்பை  மேம்படுத்த உக்ரைன், அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை மட்டுமே விரும்புகிறது. எதிர்காலத்தில் இந்த உறவுகள் மேலும் மேம்படும் என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

டிரம்பை சந்திப்பதற்கு முன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வாஷிங்டன் டிசியில் உள்ள உக்ரைன் மாளிகைக்குச் சென்று அங்கு வசிக்கும் உக்ரைன் சமூகத்தினரைச் சந்தித்தார். அப்போது, ​​உக்ரைன் மோதலை உலக அளவில் எழுப்புவது முக்கியம் என்று அவர் கூறினார்.

உக்ரைன் மக்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார். அப்போது, ​​உக்ரைனின் நலன்கள் ஒவ்வொரு நாட்டிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். அமெரிக்க அரசும், அதன் குடிமக்களும் இதுவரை அளித்த ஆதரவிற்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் உட்கார வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்த டிரம்ப்..! கடும் வாக்குவாதம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share