சர்வதேச காவல் துறையான இண்டர்போல் சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு. இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.
இந்நிலையில், ‘இன்டர்போல்’ புதிய எச்சரிக்கையாக சில்வர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து தகவல்களைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களும், குழுக்களும் வெளிநாடுகளில் மறைத்துவைத்திருக்கும் சொத்துகளைக் கண்டுபிடிப்பதற்கு சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உதவ அந்தப் புதிய எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சில்வர் நோட்டீஸ் அறிவிப்பால் இந்தியாவிற்கும் உதவி கிடைக்கும். முதல் முறையாக வெளியிடப்பட்ட இன்டர்போலின் சில்வர் நோட்டீஸின் முக்கிய நோக்கம் குற்றச் சொத்துக்களைக் கண்டறிவது. இத்தாலி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகு இந்த முதல் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு மாஃபியாவின் சொத்து பற்றிய தகவல்கள் தேடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ‘இன்டர்போலு’க்கே இனி ‘டஃப்’ கொடுப்போம்: அமித் ஷா அறிமுகம் செய்த ‘பாரத்போல்’ தளம் பற்றி தெரியுமா..
தங்கள் கருப்புப் பணத்தை மற்ற நாடுகளுக்கு மாற்றிய குற்றவாளிகளை கண்காணிக்க முடியும். இந்த அமைப்பு, சுமார் 52 நாடுகளுடன் இணைந்து, நவம்பர் 2025 வரை இந்தத் திட்டத்தில் பணியாற்றும். சில்வர் டிஃபியூஷன்ஸ்’ மூலம், மோசடி, ஊழல், போதைப்பொருள் கடத்தல், சுற்றுப்புறக் குற்றங்கள், மற்ற கடுமையான குற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சொத்துகள் குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் தகவல் கோரலாம் என்று இன்டர்போல் கூறியுள்ளது.

“மோசடியில் சம்பந்தப்பட்ட சொத்துகள், வாகனங்கள், நிதிக் கணக்குகள், வர்த்தகங்கள் உள்ளிட்டவை பற்றி தகவல் பெறுவதற்கும் அவற்றை அடையாளம் காண்பதற்கும் அவற்றின் இடங்களைக் கண்டுபிடிக்கவும் உதவி வழங்கப்படும்” என்று இன்டர்போல் தெரிவித்தது.
இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய சட்டங்களின் கீழ் சொத்துக்களை பறிமுதல் செய்ய, மீட்க பயன்படுத்தப்படலாம்.
அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு நோட்டீஸை இன்டர்போல் செயலகம் மதிப்பாய்வு செய்யும்.
தற்போது இன்டர்போலிடம் 8 வகையான வண்ண அடிப்படை அறிவிப்புகள் உள்ளன. இப்போது வெள்ளியைச் சேர்த்தவுடன், இந்த எண்ணிக்கை ஒன்பதாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் குறிப்பிட்ட தகவல்களைப் பெற இந்த வண்ண அறிவிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
காணாமல் போனவர்களையோ அடையாளம் காண முடியாதவர்களையோ கண்டுபிடிக்க மஞ்சள் நோட்டீஸ் பயன்படுத்தப்படுகின்றன. ப்ளூ நோட்டீஸின் உதவியுடன், ஒரு நபரைப் பற்றிய அதிகபட்ச தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய கருப்பு அறிவிப்பு பயன்படுத்தப்படுகிறது. ஒரு குற்றச் செயல் குறித்து ஒரு நபரை எச்சரிக்க கிரீன் நோட்டீஸ் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு தீவிரமான மற்றும் உடனடி ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்க ஆரஞ்சு நோட்டீஸ் வெளியிடப்படுகிறது.
குற்றவாளிகள் பயன்படுத்தும் முறைகள் அல்லது உபகரணங்கள் பற்றிய தகவல்களைப் பெற ஊதா அறிவிப்பு பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் தவிர, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒரு சிறப்பு நோட்டீஸையும் வெளியிட்டுள்ளது. அது வெள்ளி நோட்டீஸ். இது தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுகிறது.
நிதி நடவடிக்கை பணிக்குழு தலைவர் அளித்த எச்சரிக்கைக்குப் பிறகு இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சர்வதேச சொத்துக்களைக் கைப்பற்றும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
உலகின் 80% நாடுகளால் குற்றவியல் சொத்துக்களை திறம்பட பறிமுதல் செய்ய முடியவில்லை என்று எலிசா டி அண்டா மட்ராசோ கூறினார். அதனால்தான் இப்படி ஒரு நோட்டீஸை இண்டர்போல் வெளியிட்டுள்ளது. பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளின் பெயர் இந்தியாவிடம் உள்ளது. இவர்களின் கருப்பு பணம் எவ்வளவு வெளிநாடுகள் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு துல்லியமான மதிப்பீடே இல்லை.
இன்டர்போல் அறிமுகம் செய்துள்ள இந்த சில்வர் நோட்டீஸ், இந்தியாவுக்கு உதவியாக இருக்கம். உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைப்பவர்கள், சொத்துகளை குவிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த சில்வர் நோட்டீஸ் இந்தியாவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "லிவ் இன் பார்ட்னர்" காதலி கொலை; உடலை, 6 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்து பூட்டிய கொடூரன் கைது...