அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பது, ஒரு காவல் அதிகாரியை ஒரு காவல் நிலையத்திலிருந்து, மற்றொரு காவல் நிலையத்திற்கு அல்லது ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றுவது. இது நிர்வாக காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ செய்யப்படலாம்.

சில நேரங்களில், ஒரு காவல் அதிகாரியை ஒரு காவல் நிலையத்திலிருந்து மாற்றி, வேறு இடத்தில் பணியமர்த்துவது நிர்வாக ரீதியான தேவைகளுக்காக இருக்கலாம். ஒரு அதிகாரியை வேறு இடத்தில் பணிக்கு மாற்றுவதன் மூலம் அவரது திறமைகளை மேலும் வளர்க்க உதவும். சில நேரங்களில், ஒரு காவல் அதிகாரியை ஒரு இடத்தில் நீண்ட காலம் பணியமர்த்துவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், அவரை பணியிட மாற்றம் செய்வது ஊழலை தடுக்கும் ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 1000 FBI ஏஜென்ட்களை தண்ணி இல்லா காட்டுக்கு தூக்கி அடித்த காஷ் பட்டேல்..! பகவத் கீதை மீது சத்தியம் செய்து பிரமாணம்..!

இதனிடையே, தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி தற்போது 3 ஐ. பி. எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்தல், போலி சிலைகள் மற்றும் கடத்தப்பட்ட சிலைகளை கண்டறிதல், சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடரல், கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, உரிய கோயில்களுக்கு ஒப்படைத்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையாளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக லட்சுமி ஐ. பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை விரிவாக்கம் ஐஜியாக இருந்த லட்சுமி ஐபிஎஸ் தற்போது சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நரேந்திரன் நாயர் ஐபிஎஸ், காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பிரவேஷ்குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு நடிகர் தேர்தல்ல கூட நிக்கல, ஆனால் அவர் தான் அடுத்த முதல்வராம் - விஜயை டைரக்ட் அட்டாக் செய்த திருமா!