கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொல்லாங்கோட்டில் பிரபல ஜோதிடர் ஒருவர் உள்ளார். ஏவல், பில்லி சூன்யம், வசியம், மாந்திரீக பரிகாரம் ஆகியவற்றை செய்து மக்களிடம் காணிக்கை பெற்று வருகிறார்.
கொஞ்சம் பிரபலமான ஜோதிடர் என்பதால் மக்கள் போக்குவரத்தும், பணப்புழக்கமும் அதிகம். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள மஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஜோதிடரை பார்க்க வந்துள்ளார். தன்னை மைமுனா என அறிமுகம் செய்து கொண்ட அந்த பெண் தனக்கு 44 வயதாவதாகும் தெரிவித்துள்ளார். அவருடம் ஒரு வாலிபரும் வந்துள்ளார்.

ஜோதிடரை சாஸ்டாங்கமாக வணங்கிய மைமுனா, தனக்கும் தனது கணவருக்கு சில நாட்களாவே குடும்ப பிரச்னை இருந்து வருவதாகவும், கணவரை பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும், அதற்கு தோஷ பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? வசியம் செய்ய என்ன செய்ய வேண்டும் என பவ்வியமாக கேட்டுள்ளார்.
ஜோதிடரும் பரிகாரத்தை கூறி ஒரு சிறு பூஜை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். உடனே மைமுனா அந்த பூஜையை கொழிஞ்சாம்பாறையில் உள்ள தனது வீட்டில் அந்த பூஜையை செய்து தர வேண்டி கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜோதிடரும், நேற்று முன்தினம் அதிகாலை கொழிஞ்சாம்பாறைக்கு சென்றார்.
இதையும் படிங்க: மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. 16 மாதங்களாக டார்ச்சர்... 7 பேருக்கு வலை..!

அங்கு இருந்த 2 பேர் மைமுனா வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அருகில் உள்ள கல்லாண்டிசுள்ளாவில் உள்ள வீட்டிற்கு ஜோதிடரை அழைத்துச் சென்றுள்ளனர். அது பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடி பிரதீஷ் என்பவரின் வீடு. ஆனால் அதையெல்லாம் அறியாத அப்பாவி ஜோதிடர் பூஜைக்கு தயாரானார்.
அப்போது வீட்டில் 2 பெண்கள் உள்பட 9 பேர் இருந்துள்ளனர். அனைவரும் பூஜையில் கலந்து வந்த வந்திருப்பதாக ஜோதிடர் நினைத்து பூஜைக்குரிய வேலைகளை பார்த்துள்ளார். அப்போது அங்கு வந்த ரவுடி பிரதீஷ், ஜோதிடரை மிரட்டி அருகில் உள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளான். அங்கு மைமுனாவும் இருந்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து ஜோதிடரை மிரட்டி, அவரை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். பின்னர் அவரை நிர்வாணமாகவே மைமுனாவுடன் நிற்க வைத்து ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட போவதாகவும், ஜோதிடரின் உறவினர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் மிரட்டி உள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த ஜோதிடர், அவர்கள் கேட்டவாறே தான் அணிந்து இருந்த நான்கரை பவுன் நகை, செல்போன், கையில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் இது பத்தாது மேலும் 20 லட்சம் பணம் வேண்டும் என கேட்டு ஜோதிடரை மிரட்டி உள்ளனர். மிகச்சரியாக அந்த நேரம் பழைய வழக்கு ஒன்றில் விசாரிப்பதற்காக பிரதீஷ் வீட்டிற்கு லோக்கல் போலீசார் வந்துள்ளனர்.
உடனே அங்கிருந்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி உள்ளனர். ஜோதிடரும் இதான் சமயம் என நினைத்து உடைகளை அவசரம் அவசரமாக அணிந்து கொண்டு ஓடி உள்ளார். ஆனால் போலீசாரால் யாரையும் பிடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் நீண்ட தூரம் ஓடிய மைமுனா ஒரு இடத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றிய போது, மதுபோதையில் அவர்களை திட்டிஉள்ளார் மைமுனா.

ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்த உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைமுனாவை கைது செய்தனர். இதற்கிடையே கொழிஞ்சாம்பாறை போலீசில் ஜோதிடர் புகார் தெரிவித்திருந்தார். எனவே ஜோதிடரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மைமுனா கைது செய்யப்பட்டார்.
மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நல்லேப்பள்ளி பகுதியை சேர்ந்த 26 வயதான ஸ்ரீஜேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரதீஷ் உட்பட மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். தோஷம் கழிக்க வரச்சொல்லி ஜோதிடரையே சிக்க வைக்க பார்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: என் கணவருடன் தொடர்பில் இருந்தார்...வீடு கட்ட ரூ.25 லட்சம் தராததால் பொய் புகார்- சஸ்பெண்ட் ஐபிஎஸ் அதிகாரி மனைவி பகீர்