திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, இந்த தேர்தலில் பாஜகவின் பணி என்னவென்றால் அதிமுக எனும் ஒரு பெரிய கட்சியை மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்த ஒரு கட்சியைக் குழிதோண்டி புதைத்து விடுவார்கள் என கூறினார்.

அதைத் தாண்டி பாஜக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று. இந்த தேர்தலை பொருத்தவரை எநாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றதை போல சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான கூட்டணி வெற்றி பெறும் என கூறினார்.
இதையும் படிங்க: திடீரென திரையில் LED -யாக மாறிய NDA... அடம்பிடிக்கும் இ.பி.எஸ்… ஆத்திரத்தில் அமித் ஷா..!

பாஜக தமிழ்நாட்டில் வெல்வது நடக்கவே நடக்காது. இப்படி பச்சையாக ஒரு மாநிலத்திற்கு துரோகம் செய்கின்ற அரசாங்கத்தை எப்படி தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.தமிழ்நாடு மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களே பொதுவாக புத்திசாலிகள் தான் என்றும் பாஜக தமிழ்நாட்டில் வெல்லப் போவதில்லை, அவர்கள் அதிமுகவை அழிக்கப் போகிறார்கள், எந்த கட்சியுடனெல்லாம் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறதோ அந்த கட்சிகள் எல்லாம் மண்ணோடு புதைத்து விட்டார்கள் என கூறினார்.

நீண்ட காலமாக தமிழ்நாட்டில் இருந்த அதிமுக கட்சி எப்படி ஒரு தவறான முடிவை எடுத்து உள்ளீர்கள் என்றும் ஆட்சியில் இல்லை என்றால் கூட ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்க முடியும். ஆனால் கட்சியையே பாஜகவுடன் சேர்த்து விட்டால் கட்சியை இல்லாமல் போய்விடும், எப்படி இப்படியொரு அரசியல் தற்கொலையில் அதிமுகவினர் ஈடுபடுகிறார்கள் என தெரியவில்லை என கூறினார்.
இதையும் படிங்க: பாமகவிடம் கையெழுத்து கேட்ட பாஜக… அப்பாவை அடியோடு தூக்கிடணும்… கங்கணம் கட்டிய அன்புமணி..!