தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தியா டுடே தளம் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் சாத்தியங்கள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 2023, செப்டம்பர் 2ம் தேதி அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவினர் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கருத்துக்களைக் கேட்டு 194 நாட்களுக்குப்பின் 2024, மார்ச் 14ம் தேதி மத்திய அரசிடம் அறிக்கை அளித்தனர்.

இந்த அறிக்கையில் 194 நாட்களும் இந்தக் குழுவினர் செல்வதற்கும், அறிக்கை தயாரிக்கவும், இதர செலவினங்களுக்கும் ரூ.95 ஆயிரத்து 344 மட்டுமே செலவாகியுள்ளதாக ஆர்டிஐ அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. தினசரி செலவாக ரூ.491 மட்டுமே செலவு செய்துள்ளனர். ஆய்வுக்குரிய செலவு, அறிக்கை தயாரிக்கும் காகிதச் செலவு, அச்சடிக்கும் செலவு ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்த செலவுகளில் கணினிச் செலவு, தொலைத்தொடர்புச் செலவு, அலுவலகச் செலவுகள், அறிக்கைக்கான செலவுகள், இதர கருவிகள் வாங்கும் செலவுகள், டிஜிட்டல் கருவிகள் வாங்குதல், உள்நாட்டில் செல்ல பயணச் செலவு, அறிக்கையை அச்சடிக்கும், பப்ளிஷ் செய்யும் செலவுகள் இதில் அடங்கும்.

இந்த அறிக்கை தயாரித்த குழுவினருக்கு எந்த ஊதியமும் வழங்கப்படவில்லை, இந்த குழுவில் இருந்த உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாகவே பணியாற்றினர், ஊதியம் வாங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், நிதிஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், முன்னாள் மக்களவை செயலர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தலைவர் சஞ்சய் கோத்தாரி, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணைஅமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், நிதின் சந்திரா ஆகியோர் குழுவில் இருந்தனர்.
இதையும் படிங்க: 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 7-வது ஊதியக்குழு காலம் முடிகிறது...

2024, டிசம்பர் 17ம் தேதி இந்த திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 198 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதா மீதான விவாதம் நடத்த, ஆலோசிக்க நாடாளுன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு; 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைத்தது, மத்திய அரசு