சமக்ர சிக்ஸா திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) கீழ் தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்துக்கு 2024-25 நிதியாண்டில் ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. ஜான் பிரிட்டாஸ் கேட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணைஅமைச்சர் ஜெயந்த் சவுத்திரி இந்த பதிலை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி இன்னும் 12 மாநிலங்களுக்கு வழங்கவில்லை.. மத்திய அரசு தகவல்..!
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததால், எஸ்எஸ்ஏ திட்டத்துக்கான நிதியை வழங்கமுடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி நாடாளுமன்றத்தில் பேசியதாவது:
2024-25ம் ஆண்டில் சமக்ரா சிக்ஸா திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ2,151.60 கோடி, கேரளாவுக்கு ரூ.328.90 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.1,745.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது ஆனால், மத்திய அ ரசு சார்பில்அந்த நிதியை அந்தந்த மாநிலங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் வழங்கவில்லை.
36 மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.45,830.21 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதுவைர மார்ச் 27ம் தேதிவரை ரூ.27,833.50 கோடி நிதியை மத்திய அரசுவழங்கிவிட்டதுத, இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் வழங்கவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ,6.971.26 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.4,48746 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்ஏ நிதி என்பது பள்ளி மாணவர்களுக்கு முக்கியமானது. இந்த நிதியின் மூலம்தான் மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, ஆசிரியர்கள் ஊதியம் தரப்படுகிறது.
இவற்றில் மாநிலங்களின் செலவுகள், அதற்கேற்ப பங்கைப் பெறுதல், தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைச் சமர்ப்பித்தல், நிலுவையில் உள்ள முன்பணம், நடப்பு தேதிவரை செலவின அறிக்கைகள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை, சான்று ஆகியவற்றைப் பொருத்து நிதி வழங்கல் அமையும்” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொருத்தவைர தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாது எனத் தெரிவித்ததால், வேண்டுமென்றே, எஸ்எஸ்ஏ நிதியை மத்திய கல்வித்துறை அமைச்சர் நிறுத்திவைத்தார் என்று தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது. அது மட்டுமல்லாமல் பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையொப்பமிடவில்லை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கையில் “எஸ்எஸ்ஏ நிதியை மாநிலங்களுக்கு தராமல் நிறுத்துவதால், ஆசிரியர்களின் ஊதியம் கடுமையாகப் பாதிக்கப்படும், தொலைதூரங்களில் மாணவர்களின் கல்வி கிடைப்பது பாதிக்கப்படும். தமிழகம், கேரள, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உடனடியாக எஸ்எஸ்ஏ நிதியை விடுவிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுறுசுறுப்பில்லாத சுற்றுலாத்துறை.. ஒதுக்கிய நிதியை பயன்படுத்தல.. நாடாளுமன்ற நிலைக்குழு வேதனை..!