பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில் புனித கும்ப நீராடுவது குறித்து பாஜக தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது உணர்வற்றதாகவும், இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும் கூறி பாஜக பதிலடி கொடுத்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மஹாகும்ப சங்கமத்தில் புனித நீராடினார். இதனைக் குறிப்பிடு காங்கிரஸ் கடித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ''கேமரா முன் குளிப்பதில் பாரதிய ஜனதா தலைவர்களிடையே போட்டி நிலவுகிறது.கங்கையில் நீராடினால் வறுமை ஒழியுமா?'' என்று கேட்டிருந்தார்.

இந்தக் கருத்து சர்ச்சையானபிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு' பேரணியில் உரையாற்றியபோது, '' எனது பேச்சால் யாரேனும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார்; 'முற்றும் துறந்தும்' சினிமா ஆசை விடவில்லை
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மகாராஷ்டிரா பிரிவு தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ''காங்கிரஸ் தொடர்ந்து இந்து நம்பிக்கைகள், மரபுகளை அவமதித்து வருகிறது.கார்கேவின் கருத்துகள் உணர்ச்சியற்றது. இழிவானது.கோடிக்கணக்கான இந்துக்கள் கும்பமேளாவில் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பங்கேற்கின்றனர். இந்த புனிதமான நிகழ்வை கேலி செய்ததன் மூலம், கங்கையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளையும் கார்கே அவமதித்துள்ளார்.இந்த பேச்சு அபத்தமானது மட்டுமல்ல, மிகவும் புண்படுத்தக்கூடியது.இந்துக்கள் எப்பொழுதும் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் உரிமையை கார்கேவுக்கு யார் கொடுத்தது?

காங்கிரசுக்கு இந்து வாக்குகள் வேண்டும். அப்படியிருந்தும் ஏன் இந்துக்கள் மீது இவ்வளவு வெறுப்பு? இந்துக்களின் தவறு என்ன? அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை காங்கிரசை ஆள அனுமதித்தது அவர்களின் தவறா? காங்கிரஸ் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மகிழ்விப்பதற்காகவும், பெரும்பான்மையான இந்துக்களின் நம்பிக்கைகளை கேலி செய்வதாகவும் செயல்படுகிறது. மக்களவையில் 99 இடங்கள் இருந்தும், இந்து மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறிவிட்டனர். அவர்களால் மக்களின் நம்பிக்கையை மதிக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவர்களை அவமதிப்பதை தவிர்க்கவும்.
இன்று கும்பமேளாவை கேலி செய்கின்றனர்.நாளை எப்படியாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கும்பமேளாவை முழுவதுமாக தடை செய்வார்களா? இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கார்கேவின் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.இதுபோன்ற நடத்தையை இந்திய மக்கள் உணர்ந்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.காங்கிரஸ் தொடர்ந்து இந்து மரபுகளை அவமரியாதை செய்தால், அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை நாட்டின் அறிவார்ந்த வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்' என்றார்.
இதையும் படிங்க: 'இரு மோனாலிசா'க்களைத் தொடர்ந்து, மகா கும்ப மேளாவில் வைரல் ஆகும் இளம் பெண் துறவி ஹர்சா: ஆன்மீகத்திற்கு வந்த 'மாடல் அழகி'