திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன் (48), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திம்மராயனின் அக்கா மகன் சக்கரவர்த்தி. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை ஒரு பைனான்சியரிடம் அடமானம் வைத்து ரூ.38 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.

அந்த நிலத்தை திம்மராயன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பைனான்சியருக்கு பணத்தை கொடுத்துவிட்டு தனது பெயரில் மாற்றி கொண்டாராம். தான் அடமானம் வைத்த இடம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. அதை தனது நிலையை பயன்படுத்தி ஏமாற்றி தன் பெயருக்கு மாற்றிக்கொண்ட தாய் மாமன் மோசடியை அறிந்த சக்கரவர்த்தி, தாய்மாமன் திம்மராயனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் பணபலம் மிக்க தாய்மாமன் திம்மராயன் மிரட்டி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது,
இதையும் படிங்க: டிரம்புடன் 13 வருட நட்பு..! இந்தியாவின் ரியல் எஸ்டேட்துறையில் மிகப்பெரிய கூட்டாளி… யார் இந்த கல்பேஷ் மேத்தா..?

இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் திம்மராயன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சக்கரவர்த்தி தனது நிலம் பற்றி கேட்டுள்ளார், சக்ரவர்த்தி ஆத்திரத்தில் ஒரு முடிவுடன் வந்திருப்பதை அறியாத தாய்மாமன் திம்மராயன் வழக்கம் போல் மருமகன் தானே என்கிற ரீதியில் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சக்ரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய்மாமன் திம்மராயனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்ரவர்த்தியை தேடி வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு திம்மராயனின் உறவினர்கள் திரண்டிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 200 லோடு செம்மண் மாயம்... ரூ.30 லட்சம் திருட்டு... ஊருக்கு முன் நாறிப்போன திமுக தலைவர் Vs து.தலைவர் மோதல்..!