பிரயாக்ராஜில் உள்ள மகாகும்பமேளாவின் 19-20 கூடாரத்திலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாரணாசியின் விவேகானந்த் சேவா சமிதியின் கூடாரத்தில் உணவு சமைக்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தீ மற்ற கூடாரங்களையும் சூழ்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கின. மளமளவெனப் பற்றிய தீயால் கண்ணிமைக்கும் நேரத்திலேயே 20 முதல் 25 கூடாரங்கள் சாம்பலாயின.
தீயை கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீயைக் கட்டுப்படுத்த காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுற்றியுள்ள பகுதியை அப்புறப்படுத்தினர். சாஸ்திரி பாலத்திற்கும் ரயில்வே பாலத்திற்கும் இடையிலான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் பகுதி முழுவதும் மகா கும்பமேளா பகுதியில் வருகிறது.

கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடிக்கத் தொடங்கியதால் தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலிண்டர் வெடித்ததால் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. தீ விபத்துக்குப் பிறகு, முழு கண்காட்சிப் பகுதியிலும் குழப்பமான நிலை ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இதென்னடா ‘அழகான சாத்வி’க்கு வந்த சோதனை..? தேரில் வந்த தேவதை மீது சங்கராச்சாரியார் கடும் கோபம்..!
இந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. பிரிவு 5ல் தொடங்கிய தீ படிப்படியாக பிரிவு 19- 20 க்கும் பரவியது. பலத்த காற்று காரணமாக, தீ வேகமாகப் பரவி, சுற்றியுள்ள கூடாரங்களையும் சூழ்ந்தது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை என்று விழாக்கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். இதனை வைத்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீ எப்படி பற்றியது? அது எப்படி இவ்வளவு பயங்கரமான விபத்தை ஏற்படுத்தியது என்பதை விழாக்கமிட்டியினர் விளக்கவில்லை.

கண்காட்சிப் பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு கூடாரங்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பக்தர்கள் பணம் செலுத்த வேண்டும். கூடாரத்தில் இருந்தே தீ பற்றியுள்ளது. உணவு பரிமாறும் இடமும், தங்குமிடத்திற்கான இடமும் கூடாரத்தில் உள்ளன.கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. கூடாரங்கள் ஒரு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்து கூடாரங்களும் ஒன்றுக்கொன்று அருகருகே உள்ளன. இதனால் தீ பல கூடாரங்களை சிறிது நேரத்திலேயே சூழ்ந்து கொண்டது.இந்தத் தீ விபத்துக்கு சமாஜ்வாதி கட்சி, உ.பி.யின் யோகி அரசை குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: 55 நாள் தொடர் உண்ணாவிரதத்தால் விவசாய சங்க தலைவர் கவலைக்கிடம்… 121 நாள் போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள்..!