நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவமும் அவருடைய கையொப்பமும் அச்சிடப்பட்ட ரஷ்யாவின் "ரிவோர்ட்டின்" நிறுவன பீர் பாட்டில்களை இரண்டு இந்திய ஆண்கள் பார்ப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவர்களில் ஒருவர், "நாங்கள் அவரை எங்கள் நாணயத்தில் சுமந்து செல்கிறோம் '( கம் கரன்சி பே லேகே கூம்ரஹே ஹைன்) என்று பீர் பாட்டிலை பிடித்துக் கொண்டு இருக்கும் ஒருவர் கூறுவது இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் தீவிர மதுவிலக்கை உறுதியுடன் ஆதரித்து வந்த மகாத்மா காந்தியின் உருவத்தை இப்படி சித்தரித்து இருப்பதன் முரண்பாட்டை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

"ஜஸ்ட் நியூஸ்" தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ விரக்தியில் தொடங்கி, லேசான நகைச்சுவை வரை ஏராளமான எதிர்வினைகளை தூண்டி இருக்கிறது. பயனாளி ஒருவர், "பிரபலமான நபர்களை தங்கள் சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்துவது சரியில்லை என்பதை இந்தியா அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்" என்று, அது பற்றி கருத்து தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: தவெகவில் 40பேர்தான் ரெடி… அதிமுக கூட்டணிதான் சரி... பி.கே எண்ட்ரி… விஜய்க்கு முட்டுக்கட்டை..!
மற்றொரு பயனாளர், "இது எவ்வளவு மோசமான அவமானம்!?" என்று, ஒரு சிலேடையை பயன்படுத்தி குறிப்பிட்டு இருக்கிறார். மூன்றாவதாக ஒருவர், 'தங்கல்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் ஒரு பாடலை (பாபு சேஹத் கே லியே து ஹோ ஹானி காரக் ஹை) குறிப்பிட்டு "பாபு நீங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவர்"என்று எழுதினார். மற்றொருவர், "ஆம், நாம் அனைவரும் விரைவில் கோபப்படுவோம், ரஷ்யா மற்றும் பிரிட்டனை (தயாரிப்புகளை) ரத்து செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.

பல ஆண்டுகளாக காந்தியின் படத்தை மதுபான பிராண்டுகளுடன் இணைப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் ஒரு இஸ்ரேல் நிறுவனம் இது தொடர்பாக விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. மேலும் அதன் மதுபான பாட்டில்களில் காந்தியின் படத்தை பதித்ததற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டியது இருந்தது.
அதே ஆண்டு ஒரு 'செக்' நாட்டு மதுபான ஆலை, அதன் பீர்களில் ஒன்றுக்கு "மகாத்மா இந்தியா பலே ஆலே" என்று பதிந்ததற்காக இந்தியா அதிர்ச்சி அடைந்தது. இந்திய அரசு சாரா ஒரு நிறுவனத்தின் எதிர்ப்புகளுக்கு பிறகு அவர்கள் அந்தப் பானத்துக்கு மறு பெயர் இட்டனர்.

10 ப ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் தனது பீர்கேன்கள் மற்றும் பாட்டில்களில் காந்தியின் முகத்தை பதித்ததற்காக சிக்கலில் சிக்கியது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டது ஆகியவை நினைவு கூரத்தக்கது
இதையும் படிங்க: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனுக்கு மாபெரும் கவுரவம்..! இங்கிலாந்து அரசு வழங்கிய நைட்ஹூட் விருது