ஞாயிற்றுக்கிழமைக்காக கடையில் போய் சிக்கன் வாங்கி கொடுத்து விட்டு சென்ற கணவன் வீடு திரும்பும் போது சிக்கன் சமைக்காததை கண்டு ஆத்திரம் அடைந்தார். அவர் ஓங்கி அடித்ததில் சுருண்டு விழுந்த மனைவி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி கணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையும் சிறையில் இருப்பதால் அவர்களின் மூன்று குழந்தைகள் அனாதைகளாக தவிப்பது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் தானியானலி முண்டா சாகி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் குனி பிங்குவா வயது 35. அவருடைய கணவர் ஜெனா பிங்குவா (வயது 40).
இதையும் படிங்க: காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்; திருமணம் செய்து வைக்க மறுத்ததால் நடந்த வெறிச் செயலா?
அவர்களுக்கு சிறிய வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர். ஜெனா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையில் சிக்கன் வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து சமைத்து வைக்கும்படி கூறியிருக்கிறார்.
ஆனால் அவருக்கு மதியம் சாப்பாடு வேளைக்கு வீட்டுக்கு வர முடியவில்லை. வேறொரு வேலையா வெளியூருக்கு சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு வந்ததும் மனைவியைப் பார்த்து ஆசையோடு சிக்கன் சாப்பாடு போடும்மா என்று கேட்டிருக்கிறார். என்ன காரணமோ தெரியவில்லை குனி பிங்குவா சிக்கனை சமைத்து வைக்கவில்லை.

இதை அறிந்ததும் ஜெனா ஆத்திரமடைந்தார். அவருடைய மனைவியை கோபத்தில் ஓங்கி அடித்து விட்டார். இதனால் அந்த இடத்திலேயே கீழே சரிந்த குனி பிங்குவா சுருண்டு விழுந்து விட்டார்.
இதைப் பார்த்த ஜனா பயந்து போய் உடனே அங்கிருந்து ஓடி விட்டார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். போலீசார் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து உடனே வீட்டை விட்டு அவர் ஓடி விட்டார்.
காலையில் குழந்தைகள் கண்விழித்து பார்த்த போது தாயார் கீழே படுத்து கிடக்கிறார். தந்தையையும் காணவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஜேனா வீட்டுக்கு வந்து குழந்தைகளை சமாதானப்படுத்தினார்கள்.. குனி பிங்குவை தட்டி எழுப்பிய போது அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக இது குறித்து கோண்டியா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து குனியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் ஜெனாவை போலீசார் தேடிய போது பக்கத்து காட்டில் அவர் மறைந்து இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆதரவு படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அந்த பெண் எப்படி இறந்திருக்கிறார்? கணவர் அடித்ததால் இறந்தாரா; அல்லது ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் இறந்து விட்டாரா? என்பது தெரிய வரும். எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

உழைக்கும் வர்க்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாளாவது பிள்ளைகளும் நாமும் சிக்கனோ கறியோ சாப்பிடலாம் என்று தான் ஆசை இருக்கும். அவரும் அந்த ஆசையில் தான் கடைக்கு போய் சிக்கன் வாங்கி வந்து கொடுத்திருப்பார்.
அவருடைய நேரமோ என்னவோ, அல்லது மனைவியின் நேரம் சரியில்லையோ.. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் கோழியை சமைக்காமல் விட்டு விட்டார். மத்தியானம் சாப்பாட்டிற்கு வர முடியாமல் போனதால் இரவில் சிக்கன் சாப்பிடலாம் என்று ஆசையோடு கணவர் வந்திருப்பார்.
சமைக்கவில்லை என்றதும் இயல்பாக எல்லோருக்கும் வருவது போல கோபம் வந்திருக்கலாம். ஆத்திரத்தில் ஒரு அடி அடித்து விட்டார் மனைவியை.. கதை முடிஞ்சது.. என்ன செய்வது? தாயும் தந்தையும் ஒரே நாளில் வீட்டிலிருந்து பிரிந்து விட்டனர். இப்போது அனாதையாக நிற்கும் இந்த மூன்று பிஞ்சு குழந்தைகளின் கதியை நினைத்து அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!