இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். அதன்படி துறைமுகம் பகுதியில் வால்டாக்ஸ் சாலையில் பேருந்து நிறுத்தம் வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் ஆகியோருடன் இணைந்து இந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததாக கூறினார்.

மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இரண்டு பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக கூறினார்.. இதன் தொடர்ச்சியாக துறைமுகம் பகுதியில் நடுநிலை பள்ளியின் கட்டிடப் பணிகளுக்கான வேலை துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து 2.8 போடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த பள்ளியில் 10 வகுப்பறைகளும், ஒரு ஸ்மார்ட் வகுப்பும், ஒரு கம்ப்யூட்டர் வகுப்பும் ஒரு நூலகம் உள்ளிட்டவைகளும் அமைய உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா! தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு...!
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் துறைமுகம் பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி கடன்களை பொருத்தவரை கடந்த முறை நடந்த மாமன்ற கூட்டத்தில் விரிவான பதில்களை கொடுத்ததாகவும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார். கடன் நிலுவையில் இருந்தால்தான் பிரச்சனையே தவிர வளர்ச்சி திட்ட பணிகளுக்காக வாங்கிய கடன்களை மாநகராட்சி வட்டியும் முதலுமாக செலுத்தி வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: அரசியல் ஆதாயத்திற்கு தான் மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறார்கள் - திருமா ஓபன் டாக்.