ஜாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என கடந்த 2017 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக, ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் பிரச்சாரம் , ஜாதி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் ஆணையத்தின் பதில்மனுவை பதிவு செய்து கொண்டு மனுவை தள்ளுபடி செய்த ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வு, இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது என்றும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்துவைத்து 75ஆண்டுகள் ஆனாலும் இன்னும் குழந்தை பருவத்தில் தான் இந்தியா இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும் எனவும், குடிமக்களும்,அரசியல் வாதிகளும் சாதி மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மச்சான் என்றதற்கு கொலை செய்த விவகாரம்.. தலையில் கல்லைப் போட்டவருக்கு ஆயுள் தண்டனை..