பூமிக்குள் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்திகள் வெளியேறி, பிலேட்ஸ் நகர்வதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. உராய்வு காரணமாக, டெக்டோனிக் தட்டுகள் மெதுவாக நகரும் போது உராய்வு ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்க மானியினால் அளக்கப்படுகிறது.

அந்த வகையில் 3 ரிக்டருக்கும் குறைவாக அதிர்வுகள் இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினம் மற்றும் லேசான நிலநடுக்கம் என்றும் அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்.. கவன ஈர்ப்பு தீர்மான விவகாரத்தில் கூச்சல், குழப்பம்..!

இந்த நிலையில் மியான்மர் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாங்காக் நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மியான்மரில் நிகழ்ந்துள்ள இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே பூகம்பங்கள் ஏராளமான அபாயகரமான பொருட்களைக் கசிந்து, சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சைகள் மற்றும் பிற நுண்ணுயிரிகளுக்கு ஆபத்தை அதிகரிப்பதாகவும், நில அதிர்வால் ஏற்படும் கடுமையான நடுக்கம் சுற்றியுள்ள பகுதியைச் சுற்றி வண்டல் படிவுகளுக்கு வழி வகுத்தது நீர் மாசை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கருப்பண்ணசாமி கோயில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கீடு.. மோதல் போக்கு உருவாகும் அபாயம்..