நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
மாணவர்கள் விரும்பினால் எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் என்றும், ஆனால் கட்டாயமாக எந்த மொழியையும் திணிக்ககூடாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்கட்டும்:

இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர், “நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க ஆசைப்படவில்லை அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்க ஆசைப்படுகிறோம். இதுவரை கல்வி கற்ற அனைவரும் இரு மொழிக் கல்வியில் தான் கல்வி கற்றுள்ளோம். மாணவ மாணவிகளுக்கு இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். மாணவர்கள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். இது கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல, ஆனால் இந்தியை ஏற்றுக் கொண்டால் தான் நாங்கள் பணம் தருவோம் என்று கூறுவது பிளாக் மெயில் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதோட நிறுத்திக்கோங்க இல்லைன்னா... பாஜகவை பகிரங்கமாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்...!
கிருஷ்ணகிரி சாதி துண்டுடன் நடனம்:
கிருஷ்ணகிரியில் ஜாதி அடையாளங்களுடன் நடனமாட அனுமதித்த ஆசிரியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்கப்பட்டதற்கு நேற்று அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று பதில் அளித்தார்.

தமிழகம் முழுவதும் முதல்வர் பல்வேறு ஆய்வுகளை பள்ளி கட்டிடங்களையும் திறந்துள்ளார் 3497 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் 2027க்குள் 18000 கட்டிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தேர்தல் ஆணையம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்ற கேள்விக்கு இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பாஜக கையெழுத்து இயக்கம்:
சமகல்வி எங்கள் உரிமை என பாஜகவினர் கூறி கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து கேட்டதற்கு பாஜகவினர் ரயிலில் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றுவது போல குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்து இட வைக்கிறார்கள். நீங்கள் முன்மொழிக் கொள்கையை கொண்டு வர நினைத்தால் முதலில் பெற்றோர்களிடம் பேசி அவர்களுக்கு புரிய வையுங்கள். மாணவ மாணவிகளை பயமுறுக்கும் நோக்கில் நீங்கள் செயல்படக்கூடாது.

நேற்று கூட ராசிபுரத்தில் பேருந்து நிலையத்தில் பாஜகவினர் பள்ளி செல்லும் குழந்தைகளிடம் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளார்கள் தமிழக குழந்தைகளுக்கு நீட் வேண்டாம் என்று சொல்கிறார்கள் அதனை கேட்டு நீங்கள் நீட்ட எடுத்து விட்டீர்களா? என தமிழக பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 'அறிவாலயத்திற்கு அந்த லூசு வந்துடும்… பணம் கேட்டு துரத்தி அடி..' உதயநிதிக்கு அலெர்ட் கொடுத்த அன்பில் மகேஷ்..!