திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ரூ. 3.50 50 கோடி ரூபாய் மதிப்பில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கட்டிடத்தை கட்ட அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக செயல்பாட்டில் இருந்த அலுவலக கட்டடத்தை புதுப்பித்து அதை நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் புதிய அலுவலக கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு காணொளி வாயிலாக இன்று காலை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: கடற்கரையில் அமர்ந்திருந்த ஜோடி.. கேள்வி கேட்ட காவலர்.. மிரட்டுவதற்கு அதிகாரம் இல்லை என்று வசைபாடிய பெண்.. நடந்தது என்ன?

முன்னதாக இந்த கட்டிடத்தில் அபாயம் நிறைந்துள்ளதாகவும், அடிப்படை வசதி இன்றி தவித்து வந்ததாக அதிகாரிகள் புகார்கள் எழுப்பிய நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது அதிநவீன வசதிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: தேவநாதன் யாதவ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!