அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பிரிந்து சோதனை நடத்தினர்.

குறிப்பாக ரவிச்சந்திரன் உடைய டிவிஹெச் ஹோம்ஸ் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களையும், கே.என்.நேருவின் மகனான அருணுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம், அடையார் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: அங்கு என்ன தெரிகிறது..? அமைச்சர் வீட்டின் முன்பு சாவகாசமாக சேர் போட்டு உட்கார்ந்த திமுகவினர்..!

அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு டிவிஹெச் ஹோம்ஸ் நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று அதன் வந்து மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக இந்த விசாரணையில சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக டிவிஹெச் ஹோம்ஸ் கட்டுமான நிறுவனம் மற்றும் மற்றொரு நிறுவனத்தில நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில 90 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 500 கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் வெளியானது. அதனை அடிப்படையாக வைத்தும் இந்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்க துறையினர் பதிவு செய்துள்ளனர். அந்த அடிப்படையில் தான் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக 20க்கும் மேற்பட்ட இடங்கள்ல அமலாக்க துறையினர் இன்று காலை 7 மணி முதலே இந்த சோதனையில ஈடுபட்டனர். இந்த சோதனையில் ல பல்வேறு முக்கிய ஆவணங்கள் இதுவரை சிக்கி இருப்பதாகவும், அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் முழுமையான சோதனை நிறைவடந்த பின்னரே, எவ்வளவு ஆவணங்கள் மற்றும் எவ்வளவு கணக்கில் வராத பணம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், அந்த பணம் டிவிஹெச் ஹோம்ஸ் மற்றும் கே.என்.நேருவின் மகன் அருண் நடத்தக்கூடிய நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கும் பறிமாற்றம் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த இடி.. திருச்சி, கோவையிலும் இறங்கிய ED... ஆடிப்போன கே.என்.நேரு...!