மாமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அப்போது கவுன்சிலர்களாக இருந்த மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி , சிவாஜி ஆகியோர் அதிமுக உறுப்பினர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு, பொது சொத்துக்கும் சேதம் விளைவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது மா.சுப்பிரமணியன் அமைச்சராக உள்ளதால், வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார். 22 ஆண்டு கால நீடித்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமா? - அமைச்சர் மா.சு. விளக்கம்!
இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!