தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்ததுறை கூறியுள்ள நிலையில் அவசர அவசரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்ற சம்பவம் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாகியுள்ளது. இச்சூழலில் அவர் யாரை சந்தித்தார்? அதன் பின்னணி என்ன? என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு 471 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார்.

செந்தில் பாலாஜி உடனே அவருக்கு திமுக ஆட்சியில் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதை எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்தன. இச்சூழ்நிலையில் தான் சமீபத்தில் டாஸ்மார்க் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்ததுறை 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியது. தனியார் நிறுவனங்களுக்கும் இந்த ஊழல் குற்றசாட்டில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த குற்றசாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும் என்றும் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: எங்க சாதனைய பார்த்து சாட்டையால அடிச்சுகிட்டாங்க... அண்ணாமலையை சீண்டிய செந்தில் பாலாஜி!!

இந்த சூழலில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் 18ஆம் தேதி இரவு டெல்லி சென்று மறுநாள் தமிழ்நாட்டிற்கு திரும்பினார். அவரது டெல்லி பயணம் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதத்தை கிளப்பியது. எதிர்கட்சிகளோ அவர் பாஜக அமைச்சர்களை சந்தித்து பேசியதாக குற்றசாட்டுகளை முன்வைத்தன. இந்த நிலையில்தான் அவர் உண்மையாகவே யாரை சந்தித்தார் என்பது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டெல்லிக்கு சென்ற செந்தில் பாலாஜி உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கியை சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பான ஒரு போட்டோவும் சமூக வலைதலங்களில் வெளியாகியுள்ளது. அந்த போட்டோவில் முகுள் ரோகத்கிக்கு செந்தில் பாலாஜி சால்வை போட்டு அருகில் நிற்கிறார். செந்தில் பாலாஜி வழக்கில் முகுல் ரோகத்கி தான் வாதாடி வருவதாகவும் அவருடன் செந்தில் பாலாஜி பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அக்யூஸ்ட் நம்பர் ஒன் ஸ்டாலின்… திமுகவிற்கு கொள்ளி வைக்கும் டாஸ்மாக் ஊழல்... அண்ணாமலை அதிரடி..!