கோவையில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மொத்தம் 295 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளனர் வாய்ப்புகளை தருவதற்கு நிறுவனங்கள் தயாராக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கொடுப்பவர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளது. எனவே இந்த முகாமை பயன்படுத்தி இளைஞர்கள் பயனடைய வேண்டும் என்றார்.

கோடை காலத்தை பொறுத்த வரை மின் தேவை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக நம்முடைய தேவையை விட கூடுதலான மின்சாரம் நம்மிடம் உள்ளது. எனவே கோடை காலத்தை சமாளிப்பதற்கு என்ன கூடுதல் மின்சார தேவை ஏற்படுகிறதோ ? அது டெண்டர் மூலமாக பெறப்பட்டு தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும்.மின்சார நிறுத்தம் அல்லது மின்வெட்டு என்பது எங்கேயும் இல்லை, ஏதாவது ஒரு இடத்தில் வெப்பம் காரணமாக பழுது ஏற்பட்டு இருந்தால், அதனை இந்த அ.தி.மு.க வும், பா.ஜ.க வும் குற்றச்சாட்டாக கருதி மக்களிடம் கொண்டு போய் எப்படி சேர்க்கலாம் என்று பார்க்கின்றார்கள்.

மின்சார பழுது ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வதற்கு போதிய ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் அமையும் 70 ஆயிரம் மெகாவாட் பெருமாள் பிளான்ட் போடுவதற்கான திட்டங்களை மின்சார வாரியம் முன்னெடுத்து உள்ளது. 2000 மெகாவாட் பேட்டரி ஸ்டோரேஜ் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
இன்றைய தினம் பா.ஜ.க சார்பில் நடைபெற்று வரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி , அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு பேசியதும் அதே போல 2024 ஆம் ஆண்டு அவர் பேசியதும் என்னுடைய செல்போனில் வீடியோவாக உள்ளது. 2023 ஆம் ஆண்டு அவர் பேசும் பொழுது, மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லை என்று கூறுகிறார். ஆனால் 2024 ஆம் ஆண்டு அவர் பேசும் போது அவர்கள் வந்து விட்டால் மதுவிலக்கு வந்து விடும், கடைகளை மூடி விடுவோம் என்று கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: பெங்களூருவில் என்ன செஞ்சீங்க..? அண்ணாமலையின் ஃபளாஷ்பேக்: பொடி வைத்து பேசிய டி.கே.சி
முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து அரசு நிகழ்ச்சிகளில் சில கோமாளிகளின் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே மாதிரி பேசுபவர்களின் கேள்விகளை கேட்கலாம் தொகுதி மறு வரையறை என்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய அநீதியை ஏற்படுத்தும் அதாவது நம்முடைய குரல் டெல்லியில் ஒலிக்கும் பொழுது, அந்த குரலை கேட்பதற்கு அங்கு நபர்கள் இல்லாமல் போய்விடும் வாக்கு அளித்தவர்களின் உரிமையை காப்பாற்றுகின்ற இடத்தில் முதலமைச்சர் இருக்கிறார். இந்தியாவிற்கு வழிகாட்டிக் கூடிய ஆளுமை மிக்க தலைவராக இதனை முன்னெடுத்து இருக்கிறார். இதற்கு பிற மாநில அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தந்து உள்ளனர் என்றார்.
இதையும் படிங்க: குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்..! அதிரடியை ஆரம்பித்தார் அண்ணாமலை.. பாஜக நாளை கருப்புகொடி போராட்டம்..!