இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தார். யார் யார் என்னென்ன கேள்வி எழுப்பினார்கள், அதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் என்ன என விரிவாக பார்க்கலாம்...
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மெடிக்கல் டூரிசத்தில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாடு இந்தியாவிலேயே மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் சிறந்து விளங்கக்கூடிய ஒரு மாநிலமாக இன்றைக்கு உருவெடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தங்களுடைய சிகிச்சைக்காக சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய பகுதிகளுக்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு மருத்துவத்ததுறையிலே பல நல்ல திட்டங்களை தீட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மெடிக்கல் டூரிசம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என்றார்.

விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தமிழ்நாட்டில் உள்ள பல பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது 4.ஓ தரத்திற்கு தரம் உயர்த்தப்படும் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, “அதற்கான கட்டுமான பணிகள் விரைவிலே தொடங்கி, இந்த கல்வி ஆண்டிலேயே அவை நிறைவேற்றப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நீங்க கூடி அடிச்ச கமிஷன் எவ்வளவு?... அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதிலடி...!
சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தமிழ்நாட்டிலே செழித்திருந்த சமண் பௌத்த பண்பாட்டு சிறப்புகளை தெளிவுபடுத்தும் விதமாக காஞ்சிபுரத்திலேயோ அல்லது நாகப்பட்டினத்திலேயோ ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு சம்பந்தப்பட்ட மானியக்கோரிக்கையின் போது பரிசீலித்து, முதல்வருடன் ஆலோசித்து, அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர், தங்கமணி ஜிஎஸ்டி வரிவிதிப்பிலே வரக்கூடிய சிக்கல்கள் மற்றும் பாதகங்களை எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனர். இதை வைத்து கூட்டி கணக்கு ஒரு கூட்டல் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு லேப்டாப்பிற்கு பத்தாயிரம் ரூபாய் தான் வருகிறது. இந்த பத்தாயிரம் ரூபாயில் எத்தகைய ஒரு தரமான கணினியை வழங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு வருகிற போது மேலும் அதற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அப்படிப்பார்த்தால் ஒரு மடிக்கணினிக்கு 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்க முடியும். மாணவர்களுக்கு நல்ல தரமான மடிகணினிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்தார். தற்போது அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திணறும் கேரள அரசு..! கைமீறும் போதைக் கலாச்சாரம்..! ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 வழக்குகள் பதிவு..!