இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் செதோரா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் கமத் உடனான பாட்காஸ்ட்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டாவது நிகழ்ச்சி இது.

இந்த வீடியோவில் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசு பொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி! புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது…

பொறுமை, விடா முயற்சி மற்றும் அர்பணிப்பு ஆகிய மூன்றுமே வெற்றிக்கான வழிகள், வாழ்க்கையில் குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. குறுக்குவழிகள் நம்மை குறைத்துவிடும் என பிரதமர் அந்த நிகழ்வில் பேசி இருந்தார். மேலும், விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா. அது நிர்வாகத்தை மேம்படுத்தவும் முடிவெடுப்பதையும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை, ஆனால் அவருக்கு அமெரிக்க பாட்காஸ்டருடன் உரையாடுவது பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் வீடியோ குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ஊடகத்துறையை சேர்ந்தவர்களை செய்தியாளர் சந்திப்பில் சந்திக்க பயப்படும் நபர், வெளிநாட்டு பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள பயம் கொண்ட அவர், வலதுசாரி அமைப்பில் நங்கூரமிட்டுள்ள ஒரு வெளிநாட்டு பாட்காஸ்டரிடம் ஆறுதல் கண்டுள்ளார் என விமர்சித்தார்.
மேலும், தனது அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் திட்டமிட்டு அழித்து,சமீபத்திய வரலாற்றில் வேறு யாரும் எதிர்க்காத அளவுக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் விமர்சகர்களைத் துரத்தி செல்லும் பிரதமர் மோடி, விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று சொல்லத் துணிந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

ஒரு வருடத்திற்கு முன்பு, தன்னை உயிரியல் அல்லாதவர் என்று விவரித்தார்., இப்போது அவர்கள் 1+1 கொள்கையை நம்புவதாகச் சொல்கிறார்கள் என்று கூறினார். ஒன்று மோடி, மற்றொன்று தெய்வீகம்.
பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அண்டை நாடுகள் கொந்தளிப்பில் இருக்கும்பட்சத்தில், உலக அமைப்பு நிலையற்றதாகி வரும் நேரத்தில் அவர் இந்த விஷயங்களைச் சொல்கிறார் என்றும் குறைந்தபட்ச மனநிறைவும் அதிகபட்ச நல்லாட்சியும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சட்டத்தின் பின் ஒளிந்தாலும் மோடி அரசு தோர்த்து விட்டது..! வறுத்தெடுத்த ராகுல்காந்தி..!