சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதனை அறக்கட்டளை பெயரில் பண மோசடி மோசடி விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த விஜய பானு என்பவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தமிழகத்தில் வேலூர் சேலம் உள்ள பகுதிகளை தவிர்த்து ஆந்திராவிலும் அறக்கட்டளை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் போலீசார் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கைது செய்யப்பட்ட விஜய் பானுவை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், சேலம் மக்கள் பலர் எங்களை தேடி வந்ததாகவும் பயிற்சியின் போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு, டீ மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்ததனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது என்றும் தெரிவித்தார்.

இதனைப் பயன்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கூறி பண மோசடி திட்டத்தை அறிமுகம் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக இந்த வழக்கில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் 500 கோடி மோசடி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 216 நபர்கள் முதலீடாக 400 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பொது மக்களை ஏமாற்றிய நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சற்று அடங்காத நிலையில் மீண்டும் ஒரு மோசடி செயல் அரங்கேறியுள்ளது. சேலம் சொர்ணபுரி அய்யர் தெருவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஜேஷ் என்பவர் Create future India என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் ஆணைபோல் போலியாக தயாரித்து கொலைக் குற்றவாளியை விடுவிக்க முயற்சி: உ.பி சிறையில் ஸ்வாரஸ்யம்

பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து அதற்கான முகவர்களையும் நியமித்துள்ளார். இதனை நம்பி ஏராளமான மக்கள் ஆயிர கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இதனை எடுத்து அந்த நிறுவ நிறுவனத்தை மூடுவதாக கிடைத்த தகவலின் பெயரில் முதலீடு செய்த மக்கள், நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வரை இந்த போலீசார் பாதிக்கப்பட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கு இருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். தொடர்ந்து அந்த நிறுவனத்திலிருந்து 2.85 கோடி ரூபாய் ரொக்க பணமும், 300 கிராம் தங்கமும் 200 கிராம் வைரம் 2 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது மட்டும் இன்றி விசாரணையை தீவிர படுத்திய போலீசார் ராஜேஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிலந்தி கடியால் விமானி அவதி.. அச்சத்தில் உறைந்த பயணிகள்.. விமானத்தில் பரபரப்பு..!