தேனி மாவட்டம் தேவாரம் பகுதி சேர்ந்த சிவனேசன் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் இவரது மனைவி நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இதனாலே இவர்கள் லாபம் ஈட்டும் பணத்தை, வங்கி கணக்கில் சேமித்து வந்துள்ளனர். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சிவனேசன் அவரது வங்கி கணக்கில் இருக்கும் தொகையினை சரி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவ்வாறு, வழக்கம்போல் சிவனேசன் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்த்த போது, 24 லட்சத்து 69 ஆயிரத்து 600 ரூபாய் மாயமாய் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவனேசன், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.
அப்போது சிவனேசன் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கு பல்வேறு தவணைகளாக பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து சிவனேசன் தேனி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக் கோரி சீமான் நடத்தும் பேரணி.. அனுமதி தருவது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு..!

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்திய போலீசார், சிவனேசன் வங்கி கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்குகள் அனைத்தையும் நோட்டம் இட்டனர்.
முன்னதாக சிவனேசனின் தொலைபேசியை ஆய்வு செய்த போலீசார், தொலைபேசியில் அதிக அளவுலான வீடியோ கேம் அவ்வப்போது பதிவிறக்கம் செய்யப்பட்டதன் மூலம் தவறுதலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு செயலினால் சிவனேசனின் வங்கி கணக்கில் உள்ள விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவரின் பணத்தை மறுமணவர்கள் நூதன முறையில் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
அடுத்தது பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒன்பது வங்கி கணக்குகளை முடக்கிய போலீசார், அதில் ஒருவரின் விவரங்களை சேகரித்தனர். அதன்படி பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அர்ஜுன் குமார் என்பவரின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து பெங்களூருவில் தலைமுறைவாக இருந்த அர்ஜுன் குமாரை, சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பல் கொள்ளையடித்த பணத்தை அர்ஜுன் போன்று பல இளைஞர்களின் வங்கி கணக்கு இருக்கு அனுப்பியது விசாரணையில் அம்பலமானது.
இதனை தொடர்ந்து போலீசார் அர்ஜுன் குமாரை தேனி ஜூடிஸியல் மெஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நீதிபதி முன்பு காட்டுக்கூச்சல் போட்ட மனுதாரர்.. இது சந்தையா? நீதிமன்றமா? என கொந்தளித்த நீதிபதி..!