விபசாரம் என்பது பாலியல் உடலுறவைத் தான் குறிக்கும் என்றும் வலியுறுத்திய நீதிமன்றம், அவர் மனைவிக்கு வருமானம் இருந்தாலும் ஏற்கனவே வழங்கி வந்த நாலாயிரம் ரூபாய் இடைக்கால பராமரிப்பு தொகையை (ஜீவனாம்சம்) வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பின் மூலம் ஒருவருடைய மனைவி மற்றொருவரை நேசித்தால் அவருக்கு ஜீவனாம்சம் கிடைக்காது என்ற கணவரின் வாதத்தையும் நீதிபதி ஜி எஸ் அலுவாலியா ஏற்கவில்லை.
மனைவி விபச்சாரம் செய்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஜீவனாம்சம் மறுக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறிய நீதிமன்றம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி என் எஸ் எஸ்) பிரிவு 144 (5 )மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 (4) ஆகியவற்றை நீதிமன்றம் மேற்கோள் காட்டி இருந்தது.

குடும்ப நல நீதிமன்றத்தின் தன்னுடைய மனைவிக்கு இடைக்கால பராமரிப்பு தொகையாக மாதம் நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற உத்தரவு எதிர்த்து அந்த பெண்ணின் கணவர் தொடர்ந்த வழக்கை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கணவர் தான் ஒரு "வார்டு பாயா"க வேலை செய்வதாகவும், மாதம் ரூ.8000 மட்டுமே சம்பாதிப்பதாகவும்' கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசர கால விடுப்பு... எந்தத் தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு....
மேலும் அவர் தனது மனைவி ஏற்கனவே இந்து திருமண சட்டத்தின் பிரிவு 24-ன் கீழ் 4 ஆயிரம் ரூபாய் பெற்று வருவதாகவும், எனவே குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவின் கீழ் மேலும் 4000 ரூபாய் பராமரிப்பு தொகையாக வழங்குவது மிகையானது என்றும் வாதாடப்பட்டது. இருப்பினும் கணவரின் சம்பளச் சான்றிதழ் முறையாக சரிபார்க்கப்படவில்லை என்று கண்டறிந்த நீதிமன்றம், அந்த நபர் உடல் ரீதியாக வேலை செய்ய தகுதியற்றவர் என்பதை குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருந்தது.
"அவர் தாக்கல் செய்திருந்த சான்றிதழில், வழங்கப்பட்ட இடம் மற்றும் வழங்கப்பட்ட தேதி குறிப்பிடப் படவில்லை. எனவே அந்த சம்பளச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளால் முறையாக நிரூபிக்கப்படும் வரை இந்தக் கட்டத்தில் அந்த சான்றிதழை நம்புவது நீதிமன்றத்திற்கு கடினமான விஷயம் ஆகும். கணவரின் சொற்ப வருமானம் என்பது பராமரிப்பை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது. விண்ணப்பதாரர் தனது சொந்த அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர் என்பதை முழுமையாக அறிந்து, ஒரு பெண்ணை திருமணம் செய்து இருந்தால் அதற்கு அவரே பொறுப்பு.
ஆனால் அவர் ஒரு திறமையான நபராக இருந்தால் அவர் தனது மனைவியை பராமரிக்க அல்லது பராமரிப்பு தொகை செலுத்த ஏதாவது சம்பாதிக்க வேண்டும்" என்றும், நீதிபதி அலுவாலியா தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் "கணவர் தரப்பு விவாதத்தின் போது விண்ணப்பதாரரின் மனைவிக்கு அழகு நிலையம் நடத்தக்கூடிய சொத்து இருப்பதை காட்ட எந்த ஒரு ஆவணத்தையும் தாக்க செய்யவில்லை. இந்த விஷயம் இன்னும் முன்னணி ஆதாரங்களால் தீர்மானிக்கப் படவில்லை.
மனைவி ஒரு அழகு நிலையம் நடத்துகிறார் என்று வெறும் வழுக்கையான சமர்ப்பிப்பு மட்டுமே அவருக்கு இடைக்கால பராமரிப்பை மறுக்க போதுமானதாக இல்லை. குறிப்பாக விண்ணப்பதாரரின் மனைவி அவருக்கு சொந்தமான கடையிலோ அல்லது அவர் வாடகைக்கு எடுத்த கடையிலோ அழகு நிலையம் நடத்துகிறார் என்பதை காட்ட எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை" என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது.

மேலும் கணவர் தனது குடும்ப சொத்துக்களை இழந்து விட்டதாக கூறியதையும் நீதிமன்றம் நம்பவில்லை. அவர் இன்னும் தனது தந்தையுடன் தங்கி இருப்பதாகவும் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அறிவிப்பு போலியானது என்னும் தெரிகிறது "என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். சட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பியது நீதிமன்றம்.
பராமரிப்பு தொகை குறித்து ஒவ்வொரு சட்டத்தின் கீழும் மனைவிக்கு பராமரிப்பை உரிமைஉண்டு என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்து திருமண சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் மனைவிக்கு வழங்கப்பட்ட ஜீவனாம்சத்தை கவனத்தில் கொண்டதால் விசாரணை நீதிமன்றம் 4000 ரூபாய் இடைக்கால ஜீவனாம்சம் வழங்கியதை பெரிய ஒரு சட்ட விரோத செயல் என்று கூற முடியாது". இவ்வாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கணவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம்... 30 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு...