இந்திய முஸ்லீம் கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அசைவ உணவு உட்கொண்டதாக கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீது நடந்தது என்ன என்பது குறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நவாஸ் கனி விளக்கம் அளித்துள்ளார்.
இரு மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தயார் மற்ற அரசியல் கட்சிகளும் பேசாமல் இருக்கையில் பாஜக மட்டுமே சர்ச்சையில் ஈடுபட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும், பொய்யான தகவல்களை பரப்புகிற சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற எச். ராஜா, அண்ணாமலை கைது செய்யப்பட வேண்டும் என்றும் எம்.பி. நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்றது ஏன்?
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து விட்டு தர்காவிற்கு செல்பவர்களுக்கு எந்த மாதிரி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றோம்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. பெருமையில் துள்ளிக் குதிக்கும் அண்ணாமலை!

சமைத்த உணவை கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டு ஆடு, கோழிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக தடை என்று சொன்னார்கள். நாங்கள் காவல் ஆணையரிடம் ஏற்கனவே நடைமுறை உள்ளதை அனுமதியுங்கள் என்றோம்.
அதற்கு அவர்கள் நாங்கள் சென்று ஆய்வு செய்கிறோம். அது நடைமுறையில் இருந்தால் அதை நாங்கள் அனுமதிக்கிறோம் என்று சொன்னார்கள். நேற்றைய தினம் வருவாய் துறையினர் அங்கு சென்று ஆடு சமைக்கும் இடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்:
மலை மீது பிரியாணி சாப்பிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் , “மத நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக செயல்படும் எம்.பி.யான நான் பதவி விலக வேண்டும் என்று சொல்லியிருந்தார் . நான் கேட்கிறேன் கூட்டத்தை கூட்டிக்கொண்டு நான் அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டேன் என்று நிரூபிக்காவிட்டால் அவர் பதவி விலகுவாரா?” என சவால் விடுத்தார்.

நான் கூட்டத்தை அழைத்துச் சென்று பிரியாணி சாப்பிட்டதை நிரூபித்து விட்டால் நான் பதவி விலக தயார்? அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவரின் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும். தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பொய்களை சொல்பவர் அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு பொய் சொல்லுகிறார். இப்போது லண்டனில் படித்து தேர்ச்சி பெற்று விட்டு எல்லோரும் நம்பும்படியான பொய் சொல்கிறார்.
பொய்யான தகவல்களை சொல்லுகின்ற சமூகத்தில் பதட்டத்தை உண்டு பண்ணுகின்ற இவர்களை கைது செய்ய வேண்டும். அண்ணாமலை, எச். ராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: “இப்ப போட்டுறா வெடிய” - சொன்னதை செய்து காட்டிய அண்ணாமலை; கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி!