பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை முயற்சி செய்தார், ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டார். உற்பத்தியை ஒருங்கிணைப்பதில் இந்தியா ஒரு நாடாகத் தோற்றுவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் காட்டமாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. பிபரவரி 1ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றிருந்து நடந்து வருகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கை இனி யார் விசாரிக்கப் போகிறார்கள் தெரியுமா..?
இந்தியா ஒரு நாடாக உற்பத்தியை ஒருங்கிணைப்பதில், ஒழுங்கமைப்பதில் தோற்றுவிட்டது. என் கையில் இருக்கும் போன், சீனாவில் தயாரிக்கப்பட்டது, ஆனால், இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை முயற்சித்தார், ஆனால் நடைமுறைப்படுத்துவதில் தோற்றுவிட்டார். மேக் இன் இந்தியா நல்ல திட்டம்தான், ஆனால் அதில் தோற்றுவிட்டார். உற்பத்தியை ஒருங்கிணைப்பதில் ஒரு தேசமாக நாம் தோற்றுவிட்டு அதை சீனாவிடம் தந்துவிட்டோம்.
மக்களவைத் தேர்தலில் வென்றபின், பிரதமர் மோடி அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவணங்குவதை காங்கிரஸ் கட்சி பெருமையாகக் கருதுகிறது.தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தியது.
அதில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் என 90 சதவீதம் பேர் இருக்கிறார்கள். ஆனால், எந்த கார்ப்பரேட் நிறுவனத்தையும் ஓபிசி அல்லது தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வகிக்கவில்லை, சொந்தமாகவும் இல்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்காமல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மட்டும் சென்றுள்ளார். உண்மையில் நாம் ஜெய்சங்கரையும் அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கக் கூடாது.” எனத் தெரிவித்தார்
இதைக் கேட்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில் “ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற தீவிரமான, ஆட்சபத்துக்குரிய கருத்துக்களை சபையில் தெரிவிக்கக்கூடாது. இருநாடுகளுக்கு இடையிலான கருத்து, உண்மைத்தன்மையற்ற கருத்து” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: "எங்களால் உத்தரவிட முடியாது.." தமிழக கவர்னரை வாபஸ் பெறும் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி