மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்ப திருமண விளம்பரத்தில், மார்வாரி குஜராத்தி இளைஞரை மணமகனாக தேர்வு செய்ய 500 கோடி ரூபாய் சந்தை மதிப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
500 கோடி மதிப்பு மிக்க சொத்துகளை கொண்ட மணப்பெண்ணுக்கு மார்வாரி-குஜராத்தி மணமகன் தேவை என்கிற விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த விளம்பரத்தில் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில், பெண்ணின் உயரம், கல்வி, தொழில் போன்ற பொதுவான தகவல்களை பதிவிடுவதற்குப் பதிலாக குடும்பத்தின் சொத்து மதிப்பை பதிவிட்டுள்ளனர். ரூ.500 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் கொண்ட ஒரு நிறுவனத்தை வைத்திருக்கும் அந்தக் குடும்பம், தங்கள் 28 வயது மகளுக்கு மார்வாரி-குஜராத்தி மணமகனைத் தேடுவதாக கூறப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் குடும்பம் செய்தித்தாளில் இந்த திருமண விளம்பரத்தைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவை ஏற்பு: வக்ஃபு திருத்த மசோதாவின் கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்த விளம்பரம் ரெடிட்டில் பகிரப்பட்ட பின்னர் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சந்தை மூலதனம் என்ற சொல் பொதுவாக ஒரு நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த விளம்பரத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டு, பல்வேறு வேடிக்கையான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர்.

சம அந்தஸ்துள்ள ஒரு மணமகனை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி இது என்று சிலர் கூறுகின்றனர். கடந்த ஆண்டும், மீரட்டைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த விளம்பரம் பெரிதும் ஈர்க்கப்பட்டு வைரலானது. அவர் ஆண்டுக்கு ரூ.29 லட்சம் சம்பாதிப்பதாகவும், அவரது வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 54 சதவீதம் கூட்டு விகிதத்தில் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். விளம்பரத்தில் அந்த அவரின் புகைப்படம், சாதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த விளம்பரம் அவரது சம்பாத்தியத்தை பற்றிய விவகாரமாக மாறியது.
மும்பை தொழிலதிபர்களின் குடும்பங்கள் மார்வாரி, குஜராத்தி மணமகன்களை விரும்புவதற்குக் காரணம், குடும்பத் தொழிலைக் கையாளக்கூடியது மட்டுமல்லாமல், பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடிய ஒருவரை விரும்புவதாக நம்பப்படுகிறது.மும்பையின் பொருளாதாரத் துறையில் மார்வாரி, குஜராத்தி சமூகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.எது எப்படியோ, இந்த விளம்பரம் வைரலாகிவிட்டது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த விளம்பரத்தில், பல குடும்பங்களின் மகள்களுக்கு மார்வாரி, குஜராத்தி மணமகன்களுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு பாஜக காரணமா? - செல்லூர் ராஜு பதிலடி...!