சட்டப்பேரவையில் அதிமுக பாஜக உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி இருப்பது பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் குறித்து தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்றும், குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிருந்தினால் பதவியை விட்டு விலகக்கூட தயார் என அமித் ஷாவிடமே நேரடியாக தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இதனிடையே, புதிய பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கொடுத்த ஹிண்ட்:
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரக்கூடிய ஒரு நிலையில் இன்றைய தினம் பேரவைக்கு வருகை தந்த பாஜகவினுடைய சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரனுடைய இடத்திற்கு அதிமுகவினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அதாவது அதிமுக எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்பி உதயகுமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இருவரும் நேரடியாக சென்று சுமார் 10 நிமிடத்திற்கு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!

அதிலும் குறிப்பாக கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து, அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வரும் இரண்டு தினங்களில் பாஜகவினுடைய மாநில தலைவர் மாற்றக்கூடிய ஒரு நிகழ்வு நடைபெறலாம் என இன்று காலை முதல் தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்த தலைவர் இவரா?
அண்ணாமலை மாற்றத்திற்கு பிறகு உரிய தலைவர் யாரை தேர்ந்தெடுக்கப்படலாம் என பாஜக தலைமை முடிவு செய்து வருகிறது. அதில் முன்னிலையில் பாஜகவினுடைய சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அவரது பெயர் முன்னிலையில் இருப்பதாகவும் பாஜக தரப்பில் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவல் அதிமுகவினருக்கு கிடைக்க பெற்றிருந்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனை சட்டப்பேரவையிலேயே சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அதன் நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் அமைய இருப்பது தொடர்பாகவும் சுமார் ஒரு 10 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: பிஜேபியோட கூட்டணி வச்சா இபிஎஸ் கதை அவ்ளோ தான்.. திருமா கணிப்பு..!