'10 நிமிட சந்திப்பு... வெளிவராத புகைப்படங்கள்... உளவு பார்த்தாரா சீமான்..?' - புது பகீர் கிளப்பும் ராஜீவ்காந்தி..!
இப்போது வெளி வருகிற ஆதாரங்கள் எல்லாம் அச்சத்தையும், மன இறுக்கத்தையும் கொண்டு செல்கிறது. சந்தோஷ் அவர்கள் அளித்த பேட்டியில்,பிரபாகரனுடன், சீமான் எடுத்த அந்த புகைப்படம் போலியானது எனத் தெரிவித்துள்ளார்.
''சீமான் இயக்குநர் என்கிற போர்வையில் விடுதலைப் புலிகளுடைய போர் தளவாடங்கள், பதுங்கிடங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தளபதிகள் யார்? என உளவு பார்த்துள்ளார். அதன் விளைவாக தமிழீழம் முற்றிலுமாக 2009 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது'' என திமுக இளைஞரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் பேசிய அவர், ''ஆயுதப் போராட்டங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்தபோது எந்த அமைப்பும் அழித்து ஒழிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் தமிழீழத்திற்கு திராவிட தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினர்போய் வந்தாலும் அந்த மண் முற்றிலுமாக துடைக்கப்பட்டு அழிக்கப்படவில்லை.யாராலும் காட்டி கொடுக்கப்படவில்லை.ஆனால் தமிழீழத்திற்கு சீமான் போய் வந்த பிற்கு ஒட்டு மொத்தமாக தமிழீழ மண் அழிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் குற்றச்சாட்டு வைக்க விரும்புகிறோம். ஆறேழு மாதங்களாக தமிழீழத்தில் தங்கி இருந்த இயக்குனர் சீமான் என்கிற போர்வையில் இருந்தவர் விடுதலைப் புலிகளுடைய போர் தளவாடங்கள், பதுங்கிடங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தளபதிகள் யார்? என உளவு பார்த்துள்ளார். அதன் விளைவாக தமிழீழம் முற்றிலுமாக 2009 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது.
இப்போது வெளி வருகிற ஆதாரங்கள் எல்லாம் அச்சத்தையும், மன இறுக்கத்தையும் கொண்டு செல்கிறது. சந்தோஷ் அவர்கள் அளித்த பேட்டியில்,பிரபாகரனுடன், சீமான் எடுத்த அந்த புகைப்படம் போலியானது எனத் தெரிவித்துள்ளார். எங்களைப் போன்ற இளைஞர்களை ஏமாற்றுவதற்காக சீமான்- பிரபாகரன் எடுத்த போலி புகைப்படத்தை என்ட்ரிகார்டாக பயன்படுத்தி உள்ளார். ஆனால் அந்த புகைப்படம் ஏமாற்றும் நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டது என்பது சங்ககிரி ராஜ்குமார் சொன்ன பிறகு தெரியவந்தது. அதன் பிறகு சந்தோஷ், சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பத்து நிமிடம்கூட சந்திக்கவில்லை என்று சொன்னதும் அம்பலப்பட்டது.
இதையும் படிங்க: கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி
சீமான், இயக்குனராக இருக்கிறார். அவர் தமிழீழம் பற்றி மேடையில் பேசுகிறார். அவரை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று கொளத்தூர் மணியும், வன்னியரசும் அறிமுகப்படுத்திய பின்பு சீமான், மேதகு பிரபாகரன் அவர்களை சந்தித்துள்ளார். ஆனால் அது பத்து நிமிடம் சந்திப்பு கூட இல்லை. சீமானுடன் பிரபாகரன் எடுத்த புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.ஏற்கனவே சங்ககிரி ராஜ்குமார் நான் தான் இந்த புகைப்படத்தை எடிட் செய்தேன் என்று சொன்னது அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமல்ல.தமிழ், தமிழீழம் என்று எங்களைப் போன்ற இலட்சக்கணக்காக இயங்கிய இளைஞர்களை பொய் பித்தலாட்டம் கூறி எங்க வாழ்க்கை சீரழித்து இருக்கிறார் சீமான்.
அரசியலில் பின்னால் இருந்து இயக்கி எப்படி ஒருவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோ என்ற ஒரு படம் வந்தது. சீமான் தனிமனித ஒழுங்கீனத்தால் சேரலாதன் என்கிற போராளி, சீமானுடன் இருந்த உறவைத் துண்டித்து இருக்கிறார். ஆறு புகைப்படங்கள் எடுத்துள்ளன. அதில் நான் இரண்டை எடுத்தேன். அமர்திதாசன் நான்கு புகைப்படங்களை எடுத்தார் என்று மட்டுமே கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதெல்லாம் சீமான் தமிழீழ உணர்வாளர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றும் செயல்'' என்று ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெரியார் நகரில் விதிமீறல்... சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு..!