×
 

தாய்லாந்து மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... சரிந்த கட்டிடங்கள்; குவிந்த சடலங்கள்!!

தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுத்தில் சிக்கி 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மியான்மரின் தலைநகரான நைபியிடாவிலிருந்து வடகிழக்கே அமைந்துள்ள சகாய்ங் பகுதியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 12 நிமிட இடைவெளியில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

மத்திய மியான்மரின் மோனிவா பகுதியை மையமாகக் கொண்டு இது பதிவாகியுள்ளது. மேலும், இதற்கு இடையே 6.9 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். மியான்மரைத் தொடர்ந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, மசூதிகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுந்தது.

இதையும் படிங்க: நிலநடுக்கம் பாதிப்பு..! மியான்மர், தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்டிய பிரதமர்..!

பாங்காங்கில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுத்தில் சிக்கி 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 103 பேர் மியான்மரில் உள்ளனர். 350க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இதை அடுத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பாங்காக் நிர்வாகம் அவசர நிலையை (State of Emergency) அறிவித்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான இந்தியா வட மாநிலங்களிலும், வங்கதேசம், சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி (Tsunami) ஆபத்து இல்லை என்று தாய்லாந்து மற்றும் மியான்மர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர், இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியா (India) தாய்லாந்து மற்றும் மியான்மருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்திய அரசு நிவாரணப் பணிகளில் அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ஏப். 3 முதல் 6 வரை தாய்லாந்து, இலங்கை பயணம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share