357 ஆன்லைன் கேமிங் இணையதளங்கள், 2,400 வங்கிக் கணக்குகள் முடக்கம்: ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி
சட்டவிரோதமாக செயல்பட்ட 357 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள், அதோடு தொடர்புடைய 2400 வங்கிக் கணக்குகளை முடக்கி ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் நடவடிக்கை எடுத்ததாக நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடக இன்ப்ளூயன்சர்கள் இந்த ஆன்லைன் விளையாட்டு குறித்து ஆதரித்து விளம்பரத்தி் நடித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இந்தத் தளத்தை அணுக வேண்டும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் செயல்பட்ட வந்த 700 இ-கேமிங் இணையதளங்களை ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பரிவினர் ஆய்வு செய்தனர்.
அதில் இந்த இணையதளங்கள் ஜிஎஸ்டி செலுத்தாமல், வரி செலுத்தாமல்,மாற்று வழியில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இந்த ஆன்லைன் கேமிங் இணையதளங்கள் சார்ந்ந்த நிறுவனங்கள் இயக்கிய வங்கிக்கணக்குகள், பரிவர்த்தனைகள் குறித்தும் தெரியவந்தது.
அதில் 166 கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 357 இணையதளங்கள், சட்டவிரோத ஆன்லைன் கேமிங் இணையதங்களை மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்கத்தின் உதவியுடன் தடை செய்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி நீதிபதி வீட்டில் கணக்கில்வராத பணம்! தலைமை நீதிபதி விசாரணை அறிக்கையை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்
இதுவரை 2400 வங்கிக்கணக்குகளின் பரிவர்த்தனையை தடை செய்து, ரூ.126 கோடி முடக்கப்பட்டுள்ளது” என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியர்கள் சிலர் இந்தியாவுக்கு வெளியே ஆன்-லைன் கேமிங் இணையதளத்தை நடத்தி வந்துள்ளனர். அதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இணையதளங்களில் வெளிநாட்டிலிருந்து இயக்கிய இந்தியர்கள், இந்திய வாடிக்கையாளர்களிடமே மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக சத்குரு ஆன்லைன் மணி கேமிங் பிளாட்ஃபார்ம், மகாகாள் ஆன்லைன் கேமிங், அபி247 ஆன்லைன் கேமிங் ஆகியவை போலியாக வங்கிக்கணக்கு தொடங்கி, இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்துள்ளனர்.
இதுவரை இந்த ஆன்லைன் கேமிங்கோடு தொடர்புடைய 166 வங்கிக்கணக்குகளை ஜிஎஸ்டி நுண்ணறிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜிஎஸ்டி சட்டப்படி ஆன்லைன் மணி கேமிங் இணையதளங்கள் நடத்தினால் அதற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
ஐபிஎல் டி20 தொடர் நேற்று முதல் நடந்து வருவதால், அதில் ஆன்லைன் கேமிங், பெட்டிங் நடப்பது குறித்து தீவரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படாத வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்கள் நியாயமான போட்டியை உடைத்து, உள்ளூர் வியாபாரத்தை குலைத்து, சந்தையை சிதைக்கிறார்கள்.
இந்த ஆன்லைன் நிறுவனங்கள் போலியான பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதில் பணப்பரிமாற்றம் செய்கிறார்கள்.இதில் கிடைக்கும் பணத்தை சட்டவிரோத செயல்களுக்கும் , உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயல்களுக்கம் பயன்படுத்துகிறார்கள்” என நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இங்கே வந்து இப்படியா பேசுவது..? பஞ்சாப் முதல்வரின் பேச்சால் கடுப்பான மு.க.ஸ்டாலின்..!